Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க சரியான நேரம் இது.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் என்ன?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சவரன் ரூ.44,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.22 கேரட் தங்கம் கிராம் ரூ.5,565 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,032க்கும், 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,256க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய (31 ஜூலை) நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5550.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து ரூபாய் 44400.00 என விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை, ஒரு கிராம் ரூபாய் 80க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 80000க்கும் விற்பனையாகி வருகிறது.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!