Kerala : திருமணம் ஆகி 1 மாசம் கூட ஆகல.. பாறையில் நின்று செல்பி எடுத்த தம்பதி - 3 உயிரை பறித்த சோகம்
கேரளா திருவனந்தபுரம் அருகே செல்ஃபி எடுக்கும்போது புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சித்திக் (28) மற்றும் அவரது மனைவி நௌஃபியா நௌஷாத் (21) ஜூலை 16 அன்று திருமணம் செய்து கொண்டனர். இளம் ஜோடியை உறவினர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் பள்ளிக்கல் பஞ்சாயத்தில் உள்ள அன்சல்கான் வீட்டுக்கு சனிக்கிழமை வந்தனர்.
மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, புதுமணத் தம்பதி அன்சல் கானுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆற்றங்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் கைத்தொலைபேசியில் செல்பி எடுக்க முயன்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர்களை காப்பாற்ற முயன்ற உறவினரும் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த ஆற்றில் மீன்பிடிக்க வந்த அப்பகுதி மக்கள் சிலர் செருப்புகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் சடலங்களை மீட்டுள்ளனர்.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!