'ரமணா' பட பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு என்ன தகுதி உள்ளது? ஸ்டாலின்
Tamil News Live Updates: ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு என்ன தகுதி உள்ளது? ஸ்டாலின்

வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாத பாஜக நாட்டையும், நாட்டு மக்களையும் பிளவுப்படுத்துகிறது. இந்திய ஜனநாயகம் காப்பாற்ற வேண்டும். மத்தியில் சர்வாதிகார ஆட்சியை அடக்கி முற்றுப்புள்ளி வைப்போம். ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
'ரமணா' பட பாணியில் மத்திய அரசு ஊழல் - உதயநிதி ஸ்டாலின்!
தென் தமிழ்நாடே அழிந்துபோகும்: வைகோ எச்சரிக்கை!
கூடங்குளம் அணு உலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்
மும்பை INDIA கூட்டனிக் கட்சிகள் கூட்டம்: புதிய லோகோ, தொகுதி பங்கீடு முக்கிய அஜெண்டா!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கூடவுள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
திருப்பூர் பனியன் ஏற்றமதி நிறுவனத்தில் தீ விபத்து
திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்து சென்ற பின்பு இந்த தீ விபத்து நடந்திருப்பதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், பல கோடி மதிப்பிலான பின்னலாடைகள் மற்றும் மூலப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள இந்திய ஆடவர் 4 x 400 தொடர் ஓட்ட அணியினரைப் போற்றுகிறேன். ஆசிய அளவிலான புதிய சாதனையைப் படைத்து, ஓட்டப்பந்தயத்தில பல முன்னணி நாடுகளை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நமது அணியினர் நுழைந்துள்ளனர். இதற்காக, முகம்மது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகம்மது அஜ்மல் மற்றும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான ராஜேஷ் ரமேஷ் ஆகிய நால்வருக்கும் அவர்களது அபாரமான ஓட்டத்துக்காகப் பாராட்டுகள்.
பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
காட்டுமன்னார்கோயிலில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணிக்காக தோண்டபட்ட குழியில், 5-க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி
உள்நாட்டு விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், போதிய இருப்பை பராமரிக்கவும், புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்துள்ளது
அடுத்த 3 மணி நேரத்தில் மழை
தமிழ்நாட்டிட் ல் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரூ.19,000 கோடி செலவில் 5 உதவி போர்க்கப்பல்கள்!
இந்திய கடற்படையில் தற்போது 4 உதவி போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 5 கப்பல்கள் தயாரிக்க மத்திய அரசு ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த போர்க்கப்பல்கள் உள்நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட உள்ளன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இனி வரக்கூடிய காலங்களில், யாருக்கும் சால்வை போன்றவைகளை அணிவிக்காமல் புத்தகங்களை வழங்குங்கள். விளம்பர பதாகைகள் வைக்காதீர்கள். பட்டாசு வெடிக்காதீர்கள் என புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
வயதான தாயை தெருவில் இழுத்துச் சென்ற மகன்: உ.பி.-யில் கொடூரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வயதான தாயை அவரது மகன் கொடூரமாக தெருவில் இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
‘சிவசக்தி முனை’: பெயரில் சர்ச்சைக்கு இடமில்லை - இஸ்ரோ தலைவர்!
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என பெயரிட்டதில் எந்த சர்ச்சையும் இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்
நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்யும் சந்திரயான்3: இஸ்ரோ புதிய அப்டேட்!
நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை சந்திரயான்3 ஆய்வு செய்து வரும் புதிய அப்டேட்டை இஸ்ரோ வழங்கியுள்ளது
90's கிட்ஸ்களின் பேவரைட் பேனா: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெனால்ட்ஸ்!
நீல நிற மூடி கொண்ட பேனாவின் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியான தகவல் குறித்து பேனா தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளது
நெட்ஃபிளிக்ஸ் 84 நாட்களுக்கு இலவசம்.. ஜியோ ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும்.. முழு விபரம் இதோ !!
நெட்ஃபிளிக்ஸ் ஜியோவுடன் 84 நாட்களுக்கு இலவசமாகக் கிடைக்கும், அத்துடன் டேட்டா-அழைப்பு-செய்தி போன்ற பலன்களும் கிடைக்கும்.
‘சந்திரமுகி 2’ ஆடியோ லாஞ்சில் இது நடந்திருக்கவே கூடாது... மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் தாக்கிய சம்பவத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அட்லீயை ட்ரோல் செய்து அள்ளு அள்ளுனு அள்ளிய அடியே திரைப்படம்... 2 நாளில் இத்தனை கோடி வசூலா?
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள அடியே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 2 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.
என் சந்தோஷ கண்ணீரே... திருமண நாளில் மனைவியை கட்டியணைத்து ரொமான்ஸ் செய்த சிவகார்த்திகேயன் - வைரல் கிளிக் இதோ
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோவை பதிவிட்டு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
From The India Gate : அடங்காத ஜெயிலர் ஆட்டம்.. இந்தியா கூட்டணியில் திணறும் ஆம் ஆத்மி - காங்கிரஸ்
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 39வது எபிசோட்.
மகன்களுக்கு பட்டுவேட்டி கட்டிவிட்டு... ஓணம் விருந்து ஊட்டிவிட்ட நயன்தாரா - விக்கி பகிர்ந்த கியூட் போட்டோஸ் இதோ
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தங்கள் மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.