அட்லீயை ட்ரோல் செய்து அள்ளு அள்ளுனு அள்ளிய அடியே திரைப்படம்... 2 நாளில் இத்தனை கோடி வசூலா?
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள அடியே திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
Adiyae movie, Atlee
சிவகார்த்திகேயனை போல் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர் தான் விக்னேஷ் கார்த்திக். மிமிக்ரி ஆர்டிஸ்ட்டான இவர் முதலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் கிங்ஸ் ஆஃப் காமெடி, அது இது எது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் மிமிக்ரி செய்துவந்தார். இவருக்கு அடையாளம் கொடுத்தது பகல் நிலவு சீரியல் தான். அந்த சீரியலில் செளந்தர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் விக்னேஷ் கார்த்திக்.
GV Prakash, Gouri Kishan
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த விக்னேஷ் கார்த்திக், விஜய் டிவியில் பணியாற்றியபோதே குறும்படங்களையும் இயக்கி வந்தார். அதில் இவர் இயக்கிய யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி என்கிற குறும்படம் வேறலெவலில் ரீச் ஆனது. அதன்மூலம் அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் கோலிவுட்டில் அவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல என்கிற படம் தான்.
Adiyae movie poster
இப்படம் பெரியளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து அவர் இயக்கிய திட்டம் இரண்டு திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் கார்த்திக் அடியே என்கிற திரைப்படத்தை இயக்கினார். மல்டிவர்ஸ் கான்செப்டில் அவர் இயக்கிய இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி திரைக்கு வந்தது.
இதையும் படியுங்கள்... என் சந்தோஷ கண்ணீரே... திருமண நாளில் மனைவியை கட்டியணைத்து ரொமான்ஸ் செய்த சிவகார்த்திகேயன் - வைரல் கிளிக் இதோ
Adiyae movie trolls
இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக கெளரி கிஷான் நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய படங்களை ட்ரோல் செய்தும் எடுத்துள்ளனர். குறிப்பாக மல்டிவர்ஸில் இயக்குனர் த(அ)ட்லீ இயக்கியதாக மெளனராகம், சத்ரியன், அபூர்வ சகோதரர்கள், சக்தே இந்தியா போன்ற படங்கள் காட்டப்படுவதெல்லாம் வேறரகம் என்றே சொல்லலாம். இயக்குனர் அட்லீயை பங்கமாக கலாய்த்து எடுத்துள்ள இந்த காட்சிக்கெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது.
Adiyae movie Box Office
அடியே திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.1 கோடி கூட வசூலிக்கவில்லை. ஆனால் பாசிடிவ் விமர்சனங்கள் வந்ததை அடுத்து இரண்டாம் நாளில் பிக் அப் ஆகத் தொடங்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி உள்ளது. முதல் நாளோடு ஒப்பிடுகையில் இரண்டாவது நாளில் 200 சதவீத அதிகளவு இப்படத்திற்கு கூட்டம் வந்துள்ளது. இதனால இரண்டாம் நாளில் இப்படம் ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் அடியே படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பக்திமானாக மாறிய ராக்கி பாய்... மனைவியுடன் வரலட்சுமி பூஜை கொண்டாடிய கே.ஜி.எப் நாயகன் யாஷின் தெய்வீக போட்டோஸ்