மகன்களுக்கு பட்டுவேட்டி கட்டிவிட்டு... ஓணம் விருந்து ஊட்டிவிட்ட நயன்தாரா - விக்கி பகிர்ந்த கியூட் போட்டோஸ் இதோ
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தங்கள் மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
nayanthara Onam celebration
கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு கடந்தாண்டு திருமணம் ஆனது. தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை காதலித்து கரம்பிடித்தார் நயன். இவர்களது திருமணம் கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பிசியாக வலம் வந்துகொண்டிருந்த இந்த ஜோடி, நான்கே மாதத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அறிவித்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தது.
Vignesh shivan and nayanthara
இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது பின்னர் தெரியவந்தது. அப்போது விதிமீறல் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், சட்டப்படி தங்களுக்கு பதிவு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது என்கிற உண்மையை போட்டுடைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதையடுத்து குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக அறிவித்தனர்.
nayanthara kids
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆனாலும், இதுவரை குழந்தையின் முகத்தை காட்டியதே இல்லை. அவர் பதிவிடும் புகைப்படங்களில் கூட குழந்தையின் முகத்தை மறைத்தோ அல்லது அவர்கள் திரும்பி நின்றபடியோ தான் இருப்பார்கள். இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தங்களது மகன்களுடன் ஓணம் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே கொண்டாடி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... யூடியூபரை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஜனனி - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
nayanthara onam celebration photos
தங்களது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்கி. அதில் மகன்கள் இருவரும் பட்டுவேட்டி கட்டி அமர்ந்திருக்க, அவர்களுக்கு தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறி அதனை நயன்தாரா ஊட்டி விடும் புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன. எங்கள் ரத்தமார்ஸ் உடன் முதல் ஓணம் என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் விக்கி.
nayanthara sons Uyir and Ulag
அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்கிற பாடலை விக்னேஷ் சிவன் தான் எழுதி இருந்தார். ஒரு தந்தை மகன் மீதான பாசத்தைக் காட்டும் பாடலாக இது அமைந்திருந்தது. இந்தப் பாடலை தன் மகன்களை மனதில் வைத்து தான் எழுதினாராம் விக்கி. அதனால் தான் இந்த பாடலில் தன் மகன்களின் பெயர்களான உயிர் மற்றும் உலகு ஆகியவற்றை பாடல் வரிகளில் பயன்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... லியோ படத்தின் முன்பதிவு 6 வாரத்திற்கு முன்பே தொடங்குமென அறிவிப்பு... ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!