லியோ படத்தின் முன்பதிவு 6 வாரத்திற்கு முன்பே தொடங்குமென அறிவிப்பு... ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு, ஆறு வாரத்திற்கு முன்பே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.
leo
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது லியோ தான். நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Thalapathy vijay
லியோ படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே அப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. விரைவில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்சும் நடைபெற உள்ளது. முதலில் வெளிநாட்டில் ஆடியோ லாஞ்ச் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இறுதியாக சென்னையிலேயே நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்... உதயநிதியுடன் சேர்ந்து அரசியலிலும் கலக்க வருகிறாரா சந்தானம்? கிக் பட விழா மூலம் வெளிவந்த உண்மை
Leo vijay
லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் எப்போது என்கிற அப்டேட் தான் அடுத்ததாக வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அப்படத்தின் முன்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரங்கள் முன்னதாக முன்பதிவு தொடங்கப்படுவது வழக்கம். ஆனால் லியோ படத்துக்கோ 6 வாரம் முன்னதாக முன்பதிவை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Leo Pre Booking
அதன்படி இங்கிலாந்தில் லியோ படத்தினை வெளியிடுவதற்கான உரிமைகளை வாங்கி உள்ள அஹிம்சா நிறுவனம், இங்கிலாந்தில் மட்டும் லியோ படத்தின் முன்பதிவு வருகிற செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கும் எனவும் படிப்படியாக உலகளவில் தொடங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் வசூலில் எப்படியாவது நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல என கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... காதல் மனைவியுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற அஜித் - வைரலாகும் போட்டோஸ்