நீல நிற மூடி கொண்ட பேனாவின் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியான தகவல் குறித்து பேனா தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளது

இந்தியாவின் முன்னணி பேனா தயாரிப்பு நிறுவனம் ரெனால்ட்ஸ். இந்த நிறுவனம் பல்வேறு மாடல் பேனாக்களை தயாரித்து வெளியிட்டிருந்தாலும், வெள்ளை நிறத்தில், நீல நிற மூடி கொண்ட 'ரெனால்ட்ஸ் 045' பால் பாயிண்ட் பேனாவுக்கு இன்றளவும் மவுசு உள்ளது. 1945ஆம் ஆண்டு முதல் பேனா தயாரிப்பில் இருப்பதால், அதற்கு 045 என அந்நிறுவனம் பெயரிட்டது.

இந்த பேனா சச்சின் டெண்டுல்கர் பேனா என்றும் அழைக்கப்படுகிறது. 90's கிட்ஸ்களின் பேவரைட் பேனாவான இதனை, பள்ளி பருவத்தில் வைத்திருந்தாலே தனி பெருமைதான். இதனிடையே, 'ரெனால்ட்ஸ் 045' பேனாவின் தயாரிப்பை அந்த நிறுவனம் நிறுத்தப் போவதாக சமீபத்தில் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் அதற்கு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். அந்த பேனாவுடனான தங்களது கடந்த கால நினைவை பகிர்ந்து தங்களது வருத்தத்தை பலரும் பகிர்ந்தனர்.

Scroll to load tweet…

இந்த நிலையில், நீல நிற மூடி கொண்ட பேனாவின் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியான தகவல் குறித்து பேனா தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 045 பால் பாய்ன்ட் பேனாவின் தயாரிப்பை நிறுத்தவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் உண்மை இல்லை என்றும் ரெண்டால்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ரெனால்ட்ஸ் பற்றி மீபத்தில் பல்வேறு ஊடகங்களில் பரவிய தகவல்கள் அனைத்தும் தவறானவை. 45 ஆண்டுக்கால பாரம்பரியத்துடன் இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் ரெனால்ட்ஸ் தொடர்ந்து தரத்திற்கும், புதுமைகளுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவில் எங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு எங்களிடம் எதிர்காலத் திட்டம் இருக்கிறது. நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்துவதுதான் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. சரியான தகவல்களுக்கு எங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், நீல நிற மூடி கொண்ட பேனாவின் தயாரிப்பை நிறுத்தப்போவதாக பரவி வந்த வதந்திக்கு ரெனால்ட்ஸ் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாதையில் குறுக்கிட்ட பள்ளத்தைத் தவிர்த்துச் சென்ற சந்தியான்-3 பிரக்யான் ரோவர்! இஸ்ரோ வெளியிட்ட புது வீடியோ!