‘சந்திரமுகி 2’ ஆடியோ லாஞ்சில் இது நடந்திருக்கவே கூடாது... மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் தாக்கிய சம்பவத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கல்லூரி மாணவர்களை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து லாரன்ஸ் பதிவிட்டுள்ளதாவது : “அனைவருக்கும் வணக்கம், சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பவுன்சர் ஒருவர், கல்லூரி மாணவருடன் சண்டையில் ஈடுபட்ட துரதிஷ்டமான சம்பவம் பற்றி தற்போது தான் அறிந்தேன். முதலில் இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் நானோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ இது குறித்து அறிந்திருக்கவில்லை.
இதையும் படியுங்கள்... என் சந்தோஷ கண்ணீரே... திருமண நாளில் மனைவியை கட்டியணைத்து ரொமான்ஸ் செய்த சிவகார்த்திகேயன் - வைரல் கிளிக் இதோ
மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் எந்த அளவு விரும்புகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நபராக இருப்பதால், இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறு, அதிலும் குறிப்பாக மாணவராக இருக்கும் போது இது நடந்திருக்கக்கூடாது. அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என அந்த பதிவில் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அட்லீயை ட்ரோல் செய்து அள்ளு அள்ளுனு அள்ளிய அடியே திரைப்படம்... 2 நாளில் இத்தனை கோடி வசூலா?