நிலவின் மேற்பரப்பை உடைத்து வெப்பநிலையை ஆய்வு செய்த சந்திரயான்3 ChaSTE payload: இஸ்ரோ புதிய அப்டேட்!

நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை சந்திரயான்3 ஆய்வு செய்து வரும் புதிய அப்டேட்டை இஸ்ரோ வழங்கியுள்ளது

ISRO new update Chandrayaan3 shares observations of soil temperature on lunar south pole

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், இஸ்ரோ தனது சமூக ஊடகப் பக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 நிலவுப் பயணத்தைப் பற்றி தொடர்ந்து அறிவிப்புகளை அளித்து வருகிறது.

ரோவர் பேலோடுகளான LIBS மற்றும் APXS ஆகியவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. APXS என்பது ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆகும், அதே சமயம் LIBS என்பது லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ் கோப்பைக் குறிக்கிறது.

இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தின் பல்வேறு ஆழங்களில் நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை விவரங்களைக் காட்டும் தரவை பிரக்யான் ரோவர் அனுப்பியுள்ளது. சந்திரயான் -3 விக்ரம் லேண்டரில் உள்ள, நிலவின் மேற்பரப்பில் தெர்மோபிசிகல் பரிசோதனை செய்யும் பேலோடான ChaSTE இணைக்கப்பட்டுள்ளது. அந்த பேலோடானது நிலவின் மேற்பரப்பில் பல்வேறு ஆழங்களில் வெப்பநிலையை பரிசோதித்து அதன் விவரங்களை அனுப்பியுள்ளது.

இந்த பேலோடானது, நிலவின் மேற்பரப்புக்கு அடியில் 10 செ.மீ ஆழம் வரை சென்று வெப்பநிலையை பரிசோதிக்கும் திறன் கொண்டது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் 10 தனித்தனி வெப்பநிலை சென்சார்கள் உள்ளதாகவும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

 

இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில் ஒரு வரைபடம் உள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வின்போது, பல்வேறு ஆழங்களில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை மாறுபாடுகளை விளக்கும் தரவுகள் இடம்பெற்றுள்ளன.

பிரக்யான் ரோவர் இதுவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது முதல் பல்வேறு வீடியோக்களை அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் உள்ள சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் செல்லும் வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

90's கிட்ஸ்களின் பேவரைட் பேனா: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெனால்ட்ஸ்!

முன்னதாக, பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக பாராட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, சந்திரயான்-2 தரையிறங்கியபோது, அதன் லேண்டர் மோதி விபத்துக்குள்ளான இடத்திற்கு திரயங்கா (Tiranga Point) என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி (Shiv Shakti Point) என்றும் பெயரிட்டார். தொடர்ந்து, இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய  அவர், சந்திரயான்3 புதிய இந்தியாவின் அடையாளமாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios