10:28 PM (IST) Dec 14

இந்தியாவில் விமானக் கட்டணங்கள் இப்படித்தான் நிர்ணயிக்கப்படுகின்றன: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில்!

இந்தியாவில் விமானக் கட்டணங்கள் தேவை மற்றும் வழங்கல் கொள்கையைப் பின்பற்றி நிர்ணயிக்கப்படுபவை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது

 

10:10 PM (IST) Dec 14

அயலான் படத்தை வெளியிட தடை

#Breaking சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை. கேஜேஆர் ஸ்டூடியோ நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

10:07 PM (IST) Dec 14

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

07:11 PM (IST) Dec 14

மிக்ஜாம் புயல்: தமிழக அரசுக்கு மத்திய குழு தலைவர் பாராட்டு!

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது என புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் குணால் சத்யாத்ரி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

 

06:52 PM (IST) Dec 14

மக்களுடன் முதல்வர்: டிச.,18இல் கோவையில் தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!

மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 18ஆம் தேதி கோவையில் தொடங்கி வைக்கவுள்ளார்

 

06:11 PM (IST) Dec 14

தாத்தா, தந்தை காக்டெயில்: செயலால் சொல்லி அடிக்கும் சின்னவர்!

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது

 

05:07 PM (IST) Dec 14

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்து கொத்தாக சஸ்பெண்ட்: நாடாளுமன்றத்துக்குள் போராட்டம்!

மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக பணியிடை நீக்கம் வருகின்றனர்

 

03:21 PM (IST) Dec 14

நாடாளுமன்றத் தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட்; சிறப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றம்!

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

 

03:19 PM (IST) Dec 14

இந்தியை திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

03:13 PM (IST) Dec 14

உதயநிதியிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சூரி - அதுவும் இத்தனை லட்சமா?

நடிகர் சூரி மதுரையில் தான் நடத்தி வரும் அம்மன் உணவகம் சார்பில் வெள்ள நிவாரண நிதி வழங்கி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

02:38 PM (IST) Dec 14

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் 2ஆம் ஆண்டு கொண்டாட்டம்: இது நாகரிக மகிமையின் மறுமலர்ச்சி!

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன

 

02:23 PM (IST) Dec 14

கிறிஸ்துவராக இருந்து போர் அடிச்சிருச்சு... திடீரென மதம் மாறிய நடிகர் லிவ்விங்ஸ்டன்

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் லிவ்விங்ஸ்டன் கிறிஸ்த்துவ மதம் போர் அடித்துவிட்டதால் இந்து மதத்திற்கு மாறி இருக்கிறார்.

01:33 PM (IST) Dec 14

இந்தி தேசிய மொழி அல்ல: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

கோவா விமான நிலையத்தில் இந்தி மொழி விவகாரத்தில் தமிழ்நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த அவமதிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

01:17 PM (IST) Dec 14

திடீரென அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா... டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நடந்த எதிர்பாரா டுவிஸ்ட்!

பிக்பாஸில் டான்ஸ் மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற அர்ச்சனா, தனது புள்ளியை பூர்ணிமாவுக்கு கொடுத்து டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.

12:50 PM (IST) Dec 14

விஜயகாந்த் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரேமலதா

தேமுதிகவின் பொருளாளராக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தற்போது பொதுச் செயலாளராகியுள்ளார். பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா ஆசிபெற்றார். 

12:47 PM (IST) Dec 14

Premalatha Vijayakanth! விஜயகாந்த் இடத்தை பிடித்த பிரேமலதா!பொதுக்குழு கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு.!

தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:58 AM (IST) Dec 14

ஆளவந்தான் vs முத்து... ரீ-ரிலீஸில் மாஸ் காட்டியது யார்? ரஜினியா... கமல்ஹாசனா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

ரஜினிகாந்த் நடித்த முத்து படமும், கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படமும் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.

11:15 AM (IST) Dec 14

இது என்னடா வம்பா போச்சு.. ஐயப்ப பக்தர்கள் குவியும் நேரத்தில் கேரளாவில் மீண்டும் வேலையை காட்டும் கொரோனா.!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் கேரளாவில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்து வருவது பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

11:14 AM (IST) Dec 14

பாதுகாப்பு குறைபாடு ஏழு பேர் சஸ்பெண்ட்!!

நாடாளுமன்றத்தில் நேற்றைய பாதுகாப்பு குளறுபடி சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரை மக்களவைச் செயலகம் சஸ்பெண்ட் செய்தது

11:12 AM (IST) Dec 14

பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் எவிக்‌ஷன்... அதிரடியாக வெளியேற்றப்பட்டது யார்?

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் mid week eviction நடந்துள்ளதாகவும் அதில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.