Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

MK Stalin condemns opposition mps suspension smp
Author
First Published Dec 14, 2023, 10:02 PM IST

நாடாளுமன்றத்தில் இன்றைய அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கொண்டு வந்தார்.

அத்தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளில் இருந்து குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவைக்குள்ளேயே சஸ்பெண்ட் செய்யப்ப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது மக்களாட்சிக்கு எதிரானதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மலினப்படுத்துவதும் ஆகும்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரியது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமையை நசுக்குவதுதான் நாடாளுமன்றத்தின் புதிய நடைமுறையாகி வருகிறதா? மக்களாட்சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்படுது ஏன்?

 

 

15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கோருகிறோம். நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கான களமாக இருக்கவேண்டுமே ஒழிய, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்காக இருப்பது அறவே கூடாது.” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios