- Home
- Gallery
- ஆளவந்தான் vs முத்து... ரீ-ரிலீஸில் மாஸ் காட்டியது யார்? ரஜினியா... கமல்ஹாசனா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
ஆளவந்தான் vs முத்து... ரீ-ரிலீஸில் மாஸ் காட்டியது யார்? ரஜினியா... கமல்ஹாசனா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
ரஜினிகாந்த் நடித்த முத்து படமும், கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படமும் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.

Aalavandhan, Muthu
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் இருபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். சமகால நடிகர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரின் நட்பு என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. என்ன தான் நட்பாக இருந்தாலும் நடிப்பென்று வந்துவிட்டால் இருவருமே போட்டியாளர்கள் தான் என ரஜினி, கமல் இருவரும் பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். அவர்கள் இருவரது படமும் அண்மையில் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின.
Rajini, Kamal
கடந்த டிசம்பர் 8-ந் தேதி கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படமும், ரஜினிகாந்தின் முத்து திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆகின. இந்த இரு படங்களும் போட்டி போட்டு ரிலீஸ் ஆனதால் இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் வென்றது யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், முத்து மற்றும் ஆளவந்தான் திரைப்படம் ரீ-ரிலீஸாகி எவ்வளவு வசூலை வாரிக்குவித்துள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
Aalavandhan re release
அதன்படி நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் ரூ.92 லட்சம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 60 லட்சம் வசூலித்துள்ள இப்படம், இதர மாநிலங்களில் 9 லட்சமும், வெளிநாடுகளில் 25 லட்சமும் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Muthu re release
அதேபோல் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ரீ-ரிலீஸில் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.26.5 லட்சம் வசூலித்துள்ளதாம் முத்து திரைப்படம். இதன்மூலம் இந்த ரீ-ரிலீஸ் மோதலில் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் தான் வாகைசூடி இருக்கிறது.
Aalavandhan kamal
ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போது அப்படம் யாருக்குமே புரியவில்லை என்கிற விமர்சனம் எழுந்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியையும் சந்தித்தது. அன்று பிளாப் ஆன இப்படம் இன்றைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பது இந்த ரீ-ரிலீஸ் மூலமே தெரிகிறது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு செம்ம சந்தோஷத்தில் உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் எவிக்ஷன்... அதிரடியாக வெளியேற்றப்பட்டது யார்?