- Home
- Gallery
- ஹீரோவா இல்ல... தொழிலதிபராக வந்து உதயநிதியிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சூரி - அதுவும் இத்தனை லட்சமா?
ஹீரோவா இல்ல... தொழிலதிபராக வந்து உதயநிதியிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சூரி - அதுவும் இத்தனை லட்சமா?
நடிகர் சூரி மதுரையில் தான் நடத்தி வரும் அம்மன் உணவகம் சார்பில் வெள்ள நிவாரண நிதி வழங்கி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhayanidhi Stalin, soori
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, கார், பைக் போன்ற பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த வெள்ள நீர் வடியவே கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது. இதனால் சென்னை மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
sivakarthikeyan
வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு குரும்பத்துக்கும் அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவிகளை செய்து வருகின்றனர். இதுதவிர திரையுலக பிரபலங்கள் பலரும் தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vishnu vishal
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் வெள்ள நிவாரண நிதி வழங்கி இருந்தார். அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷாலும் உதயநிதியை சந்தித்து தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் வழங்கி இருந்தார். இவரும் வெள்ள பாதிப்பில் சிக்கி பின்னர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
soori flood relief fund
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் சூரி, இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வெள்ள நிவாரண நிதியை வழங்கி இருக்கிறார். அவர் நடிகராக மட்டுமின்றி தொழிலதிபராகவும் வந்து மதுரையில் தான் நடத்தி வரும் அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்தை வெள்ள நிவாரணத்துக்காக வழங்கி இருக்கிறார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சூரி நடிப்பில் தற்போது விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... கிறிஸ்துவராக இருந்து போர் அடிச்சிருச்சு... திடீரென மதம் மாறிய நடிகர் லிவ்விங்ஸ்டன்