Oily face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா: எளிதான தீர்வுகள் இதோ உங்களுக்காக!
பலரும் பல்வேறு முகப்பூச்சுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவையனைத்தும் சருமம் தொடர்பான பல நோய்களை உண்டாக்கும் என்பதே உண்மை. எண்ணெய் வழிவதில் இருந்து எளிதாக எவ்வாறு விடுபடலாம் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
பொதுவாக சிலருக்கு முகத்தில் எண்ணெய் வழிவது போன்ற தோற்றம் இருக்கும். இது மற்றவர்கள் முன்னால், சிறிது தயக்கத்தை ஏற்படுத்தக் கூடும். முகத்தில் எண்ணெய் வழிவதால், பொது இடங்களுக்கு சென்றால் சிலருக்கு அவஸ்த்தையாக இருக்கும். இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை தான் மிக முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. மேலும், முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்க பலரும் பல்வேறு முகப்பூச்சுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவையனைத்தும் சருமம் தொடர்பான பல நோய்களை உண்டாக்கும் என்பதே உண்மை. எண்ணெய் வழிவதில் இருந்து எளிதாக எவ்வாறு விடுபடலாம் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும் - மோர்
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, கடைந்த மோரை எடுத்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில்ல் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால், முகத்தில் வழியும் எண்ணெய் தன்மை விரைவாக மறைந்து விடும்.
தயிர் மற்றும் மஞ்சள்
முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்க 1/2 கப் தயிருடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவி நன்றாக காய வைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் சுரக்கும் அதிகளவிலான எண்ணெய்ப் பசை கட்டுப்படுத்தப்பட்டு, சிறந்த தோற்றத்தை நமக்கு கொடுக்கிறது.
Mouth ulcers: வாய்ப் புண்ணால் அடிக்கடி அவஸ்தையா? இதோ இருக்கு சில பாட்டி வைத்தியங்கள்!
பப்பாளி
முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்க, பப்பாளியை அரைத்து முகத்தில் தடவிய பிறகு, சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். பப்பாளி சருமத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவி புரிகிறது.
துளசி
எண்ணெய்ப் பசை சருமப் பிரச்சனைக்கு மட்டுமல்லாமல், பருக்களைப் போக்குவதற்கும் மற்றும் இதர சருமப் பிரச்சனைகளை சரிசெய்யவும் துளசி உதவுகிறது. இதற்கு சிறிதளவு துளசி இலைகளை எடுத்து, நீரில் கழுவி பிறகு அரைத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றைக் கலந்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் சருமம் பொலிவு பெறும்.