MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாக சைத்தாயாவுக்கு முன் பிரபல தொழிலதிபரை காதலித்த சோபிதா! யார் அவர்?

நாக சைத்தாயாவுக்கு முன் பிரபல தொழிலதிபரை காதலித்த சோபிதா! யார் அவர்?

நடிகை சோபிதா துலிபாலா, நாக சைதன்யா டிசம்பர் 4, 2024 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், சோபிதாவின் முன்னாள் காதலர் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 20 2024, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

நடிகை சோபிதாவுக்கு திரைப்படங்களை விட, அதிகம் கை கொடுத்தது ஓடிடி தளங்களில் இவர் நடிப்பில் வெளியான வெப் தொடர்கள் தான். எனவே இவரை ரசிகர்கள் "ஓடிடி ராணி" என்றே அழைக்கின்றனர். 2016-ல் அனுராக் காஷ்யப்பின், 'ராமன் ராகவ்' படத்தின் மூலம், அறிமுகமான சோபிதா, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் தான்.
 

26
Sobhita Dhulipala Cinema carrier

Sobhita Dhulipala Cinema carrier

சோபிதா எப்படி தனித்துவமான திரைப்பட தேர்வுகள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவனிக்க வைத்தாரோ... அதே போல் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் கூர்ந்து கவனிக்க பட்டு வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், சோபிதா பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை தான், அடுத்த மாதம் (டிசம்பர் 4-ஆம் தேதி) திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

அட்ரா சக்க..! கயல் சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல வெள்ளித்திரை ஹீரோ!
 

36
Sobhita Dhulipala Ex Lover

Sobhita Dhulipala Ex Lover

சமந்தா நாக சைதன்யாவை பிரிவதற்கு முக்கிய காரணம் சோபிதா தான்... என சிலர் கூறி வந்த நிலையில், சோபிதா - நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்வதற்கு முன்பு யாருடன் காதலில் இருந்தார்?  என்கிற தகவல் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

46
Pranav Misra

Pranav Misra

நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்வதற்கு முன்பு சோபிதாவுக்கு ஒரு உறுதியான உறவு இருந்துள்ளது. ஆம், சைதன்யாவை சந்திப்பதற்கு முன்பு சோபிதா பிரபல பேஷன் டிசைனர் பிரணவ் மிஸ்ராவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் ஹியூமன் பிராண்டின் இணை நிறுவனர். தற்போது பிரணவ் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். 

துபாயில் பல கோடி சொத்துக்கு அதிபதி; கீர்த்தியை திருமணம் செய்ய உள்ள அந்தோணி தட்டில் யார்?https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-who-is-antony-thattil-actress-keerthy-suresh-going-to-marry-mma-sn7bpm
 

56
Pranav Misra details

Pranav Misra details

அவர்கள் 2019-ல் ஒரு பேஷன் நிகழ்வில் சந்தித்த போது இருவருக்கும் இடையே நட்பு அரும்பிய நிலையில், பின்னர் அது காதலாக மலர்ந்தது. சில வருடங்கள் இருவரும் டேட்டிங் செய்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆனால் இதுவரை சோபிதா - பிரணவ் பிரிவுக்கான தெளிவான காரணம் வெளியாகவில்லை. 
 

66
Naga Chaitanya-Sobhita Dhulipala Marriage

Naga Chaitanya-Sobhita Dhulipala Marriage

பின்னர் நாக சைதன்யா தனது முதல் மனைவி சமந்தா ரூத் பிரபுவிடமிருந்து பிரிந்த பிறகு, சோபிதாவுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்ல துவங்கினார். இவர்கள் இருவரும் எதேர்சையாக எடுத்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வெளியாகி... இருவருக்கும் இடையே உள்ள உறவை உறுதி செய்தது. ஆரம்பத்தில் தங்களுடைய உறவு குறித்து வெளிப்படுத்தாத இவர்கள், பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதி செய்தனர். அதன்படி சோபிதா - சைதன்யா திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் சைத்தாயா - சோபிதா கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கரீனா கபூரை கடுமையாக விமர்சித்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி; ஏன்?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சோபிதா துலிபாலா
நாக சைதன்யா
நாகார்ஜுனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved