Mouth ulcers: வாய்ப் புண்ணால் அடிக்கடி அவஸ்தையா? இதோ இருக்கு சில பாட்டி வைத்தியங்கள்!
வாய்ப்புண்களை தொடக்கத்திலேயே தடுப்பது தான் மிகவும் நல்லது. இதனைத் தடுக்க சில எளிய பாட்டி வைத்தியங்கள் உள்ளது. இப்போது அவை என்னென்ன என்பதை காண்போம்.
நம்மில் பலருக்கும் அடிக்கடி வாய்ப்புண் வருவது இயல்பு தான். இது சாதாரண விஷயம் தான் என்றாலும், இதனை கவனிக்காமல் விடுவதாலோ அல்லது அடிக்கடி வந்தாலோ பிரச்சனை நிச்சயம் பெரிதாகி விடும். ஆகவே, ஆரம்பத்திலேயே வாய்ப்புண்ணிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு மற்றும் அண்ணம் போன்ற பகுதிகளில் கடுகளவு உண்டாகும் கொப்புளங்கள், சில நாட்களிலேயே உடைந்து, குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்துகிறது. ஆகவே வாய்ப்புண்களை தொடக்கத்திலேயே தடுப்பது தான் மிகவும் நல்லது. இதனைத் தடுக்க சில எளிய பாட்டி வைத்தியங்கள் உள்ளது. இப்போது அவை என்னென்ன என்பதை காண்போம்.
வாய்ப்புண்களை குணப்படுத்தும் வைத்தியங்கள்
- தேங்காய் பாலில் தினந்தோறும் 3 முதல் 4 முறை வாய் கொப்புளிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் வாய்ப்புண்கள் குணமாகும்.
- 1 கப் அளவு தண்ணீரில், 1 டீஸ்பூன் தனியா சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மிதமாக சூடானதும் வடிகட்டி, இந்த தண்ணீரில் வாய் கொப்புளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை இதை பின்பற்றினால், வாய்ப்புண்கள் விரைவில் நீங்கும்.
- தினசரி 3 முதல் 4 முறை தக்காளி பழச்சாறு கொண்டு வாய் கொப்புளிக்க வேண்டும். அதேபோல, தினந்தோறும் 3 முதல் 4 முறை பச்சைத் தக்காளி அல்லது தக்காளிச்சாறு சாப்பிட வேண்டும். இது வாய்ப் புண்களுக்கு சிறந்த வைத்தியமாக இருக்கிறது.
- 1 டீஸ்பூன் கிளிசரைனில் மஞ்சள் பொடியைச் சேர்த்து, அந்த பேஸ்டை அப்ளை செய்ய வேண்டும். பிறகு, தண்ணீரில் சிறிது கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சூடாக்கி, அது வெதுவெதுப்பானதும் வாய் கொப்பிளித்தால் வாய்ப்புண்கள் விரைவில் ஆறும்.
- ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் மற்றும் ஒரு கிளாஸ் சூடான நீரையும் எடுத்துக் கொண்டு, இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்க வேண்டும். இது மௌத் அல்சர்க்கு சிறந்த தீர்வாக அமையும்.
- 2 கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 கப் அளவு வெந்தய கீரையை சேர்க்க வேண்டும். இதனை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும். இந்த தண்ணீரை வடிகட்டி, தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்க வேண்டும். இப்படிச் செய்வதனால் வாய்ப்புண்கள் விரைவில் குணமாகும்.
Grape water: திராட்சை தண்ணீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 5 முதல் 6 துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிட்டு, பின்னர் தண்ணீரை குடிக்க வேண்டும். வாய் புண்கள் ஏற்படும் சமயத்தில் இதை 5 முதல் 6 முறை செய்து வந்தால் விரைவில் நலம் பெறலாம்.
- கற்கண்டை எடுத்து உடைத்துப் போட்டால், காற்றில் உள்ள ஈரப்பதத்தில் அது கரையத் தொடங்கி விடும். அதில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்து குழைத்து, வாய்ப்புண்ணில் தடவி வந்தால், விரைவில் குணமடையலாம்.
- வாழைப்பழம் மற்றும் தயிரை காலையில் சாப்பிடலாம். மதிய வேளையில் வாழைப்பழத்தோடு சிறிதளவு தயிர் மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண்கள் விரைவில் குணமடையும்.
- தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலந்த கலவையுடன் ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்தால், வாய் புண்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும்.
- பெரிய நெல்லிக்காயை பேஸ்ட் போல செய்து, அதனை தினந்தோறும் இரண்டு முறை வாய்ப்புண்களின்ஸமீது தடவவ வேண்டும். இவ்வாறுச் செய்வதால், வாய்ப்புண்களை விரைவில் குணப்படுத்தலாம்.
- கசகசாவுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து அரைத்து, அந்தக் கலவையை சாப்பிட உடனடியாக வாய்ப்புண்ணில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.