Meena Kumari: 'கயல்' சீரியல் நடிகை மீனா குமாரி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படங்கள்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'கயல்' தொடரில், ஹீரோயினின் அம்மாவாக நடித்து வரும், நடிகை மீனா குமாரியின் மருமகளுக்கு வளையக்காப்பு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கயல் சீரியலில் காமாட்சியாக நடித்து, வரும் நடிகை மீனா குமாரியின் மருமகளுக்கு, சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கயல் சீரியலில் காமாட்சியாக நடித்து, வரும் நடிகை மீனா குமாரியின் மருமகளுக்கு, சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் விஜயகாந்தின் முதுகில் ஏறி, சண்டை காட்சிகளில் நடித்து... மிரளவைத்தார். பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் 'பத்ரி' படத்தில் ரியாஸ்கானுக்கு ஜோடியாக, அதாவது விஜய்யின் அண்ணியாக நடித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதே போல் அஜித் நடித்த 'கிரீடம்' படத்தில் அஜித் அக்காவா நடித்திருந்ததும் மீனா குமாரி தான். இந்த படத்தை தொடர்ந்து, சில இளம் நடிகர்கள் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
11-ஆம் வகுப்பு, முடித்ததுமே... நடிக்க வந்த இவர், சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்ததால் 'வைர நெஞ்சம்', 'மலர்கள்' உள்ளிட்ட தொடர்களில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் நிலையான இடம்பிடித்தார்.
திருமணத்திற்கு பின்னர் சீரியலை விட்டு விலகிய இவர் பின்னர், சந்திரலேகா சீரியல், மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. மேலும் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் சீரியலாகவும் இருந்து வருகிறது.
இந்த சீரியலை தொடர்ந்து தான், தற்போது கயல் சீரியலில், நாயகி சைத்ரா ரெட்டியின் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார். காமாட்சி என்கிற ரோலில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் மீனா குமாரியின் வீட்டில் விசேஷம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மீனா குமாரியின் மகன் மனோஜுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், தற்போது இவரின் மருமகள் சிந்து தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ளார், அவருக்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு செய்து அழகு பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் ஆச்சர்யத்துடன்? உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி எழுப்பி வருவதோடு, தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.