இது தான் புது ட்ரெண்டா? ஸ்டைலிஷ் அவுட் ஃபிட்டில்.. விக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.
Jawan Actress Nayanthara
'ஜவான்' படத்தின் வெற்றியின் மூலம், பாலிவுட் ரசிகர்களாலும் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ள நடிகை நயன்தாரா, சமீப காலமாக சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
9Skin Launch
கடந்த வாரம், தன்னுடைய சொந்த அழகு சாதன பொருளான '9ஸ்கின்' என்கிற தயாரிப்பை மலேசியாவில் லான்ச் செய்தார். இதில் குறிப்பிட்ட சில பிரபலங்களுக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மலேசிய மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Nayanthara Family time
இதை தொடர்ந்து சென்னை வந்த நயன்தாரா, ஒரு பக்கம் தன்னுடைய குழந்தை - குடும்பம் என செம்ம பிசியாக இருந்தாலும், மற்றொருபுறம், திரைப்படங்கள் நடிப்பது, கணவருடன் பிஸ்னஸை பார்த்து கொள்வதிலும் பரபரப்பாக இயக்கி கொண்டிருக்கிறார்.
Nayanthara Stylish Outfit
இந்நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன், ஸ்டைலிஷான அவுட் பிட்டில் படு ரொமான்டிக்காக எடுத்து கொண்ட, புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Classic Style
இந்த புகைப்படத்தில் நயன்தாரா, செக்குடு ஷர்ட் அணிந்து... அதன் மேல் கருப்பு நிற ப்ளேசர் போட்டுள்ளார். மேலும் அதற்கேற்றாப்போல் லூஸ் பிட்டிங் ஜீன்ஸ் அணிந்து, கையில் ஒரு வாட்ச், கண்களில் கூலிங் கிளாஸ் என செம்ம கிளாசியாக இருக்கும் நயன். எளிமையாக ஒரு கொண்டை மட்டுமே ஹேர் டூ செய்துள்ளார்.
Romantic Photos
விக்னேஷ் சிவன், வழக்கம் போல் ஒரு டி- ஷர்ட் மற்றும் ஃபார்மல் பேண்ட் அணிந்துள்ளார். சில்வர் லக்கேட்டுடன் கூடிய செயின் ஒன்றும் அணிந்துள்ளார். எளிமையான லுக்கில் இருவரும் கண்ணோடு கண் பார்த்து, ரொமான்ஸ் செய்யும் இந்த புகைப்படங்கள்... தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.