'லியோ' ட்ரைலர் ரிலீஸ்! ரோகிணி தியேட்டரில் 10 லட்சத்தை பதம் பார்த்த ரசிகர்கள்! உரிமையாளர் செய்த நெகிழ்சி செயல்!
'லியோ' ட்ரைலர் ரிலீஸ்... ரோகிணி தியேட்டரில் 10 லட்சத்தை பதம் பார்த்த தளபதி ரசிகர்கள்! உரிமையாளர் செய்த நெகிழ்சி செயல்!

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸ் ஆனது.
இந்த ட்ரெய்லரை தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரோகினி திரையரங்கம் உள்ளிட்ட ஒரு சில திரையரங்கங்கள் வெளியிட்டன. எனவே திரையரங்கு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூறியதால் அந்த இடமே மிகவும் பரபப்பாக காணப்பட்டது. பின்னர் சரியாக நேற்று மாலை 6:30 மணிக்கு 'லியோ' திரைப்படத்தின் டிரைலர் திரையரங்கில் ஒளிபரப்பான நிலையில், பிரம்மாண்ட திரையில் ரசிகர்கள் அனைவரும் தளபதியின் மாஸான 'லியோ' பட டிரைலரை கண்டு ரசித்தனர்.
திரையரங்கின் வெளியே பாலபிஷேகம், பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்... உள்ளே கலர் தாள்களை தூக்கி எறிந்து ஆரவாரம் செய்தனர். மேலும் சிலர் ரோகிணி திரையரங்கில் உள்ள சுமார் 400 சேர்களை அடித்து நொறுக்கியதில், ரோகிணி திரையரங்க உரிமையாளருக்கு, சுமார் 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரசிகர்களால் திரையரங்கில் ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை திரையரங்கு உரிமையாளர் சார்பில் இருந்து இந்த சேதாரத்திற்காக ரசிகர்கள் மீது என ஒரு புகாரும் காவல் நிலையத்தில் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ரோகிணி திரையரங்கு உரிமையாளரின் செயல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அதே போல் இன்று, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி இந்த வழக்கை வேறு ஒரு வழக்குடன் சுட்டிக்காட்டி பேசுகையில், ரோகினி திரையரங்கில் இப்படி நடப்பதற்கு போலீஸ் தான் காரணம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.