Santhanam Net Worth: காமெடி நடிகராக அறிமுகமாகி.. ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் சந்தானத்தின் சொத்து மதிப்பு!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, இன்று ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Lollu Saba Santhanam
விஜய் டிவி தொலைக்காட்சியில், துவங்கப்பட்டு... பல காமெடி நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு வாரி வழங்கிய 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் தனது திரை பயணத்தை துவங்கியவர் தான் நடிகர் சந்தானம்.
Debut in Manmadhan
சந்தானத்தின் தனித்துவமான காமெடி கவுண்ட்டர்கள், நடிகர் சிம்புவை, மிகவும் கவர்ந்த நிலையில் 'மன்மதன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். முதல் படத்திலேயே காமெடியில் அசத்திய சந்தானத்திற்கு, தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Comedy With Lead Actors:
சந்தானத்தின் தனித்துவமான காமெடி கவுண்ட்டர்கள், நடிகர் சிம்புவை, மிகவும் கவர்ந்த நிலையில் 'மன்மதன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். முதல் படத்திலேயே காமெடியில் அசத்திய சந்தானத்திற்கு, தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Introduce Hero:
அந்த வகையில் இவர் ஹீரோவாக நடத்த, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கைப்போடு போடுராஜா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தனக்கு ஏற்ற போல் தொடர்ந்து, காமெடி கலந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Leo Trailer: லியோ ட்ரைலர் போட்டது ஒரு குத்தமா? ரோகிணி திரையரங்கை பந்தாடிய தளபதி விஜய் ரசிகர்கள்!
salary details
தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய போது... மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவராக இருந்த சந்தானம், பின்னர் காமெடி படங்களுக்கே 3 கோடி முதல் சம்பளம் பெரும் நடிகராக உயர்ந்தார்.
Net worth
மேலும் தற்போது ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு 15 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ள நிலையில், சில லாபகரமான ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களிலும் இன்வெஸ் செய்துள்ளார். மேலும் 2 சொகுசு கார்கள் மற்றும் முதல் முதலில் வாங்கிய காரையும் பத்திரமாக வைத்துள்ளார். மேலும் இவரின் சொத்து மதிப்பு தற்போது 100 கோடி முதல் 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.