விண்வெளி மர்மம்! 140 மில்லியன் மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த லேசர் செய்தி!
சைக் லேசர் தகவல்தொடர்பு டெமோ வெற்றிகரமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒரு சமிக்ஞையை அனுப்பியுள்ளது. 140 மில்லியன் மைல் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம்.
விண்வெளியில் தொலைதூரத்தில் இருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞை ஒன்று கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. தோராயமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள நாசாவின் புதிய விண்கலமான "சைக்" இத்தகவலை அளித்துள்ளது.
அக்டோபர் 2023இல், நாசா சைக் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது. 'சைக் 16' என்ற சிறு விண்கல்லை நோக்கி அனுப்பிய சைக் சாட்டிலைட் முதன்மையாக உலோகத்தால் ஆனது என்று கருதப்படுகிறது. சூரிய குடும்பத்தில் இதுபோன்ற விண்கற்கள் அரிதானவை ஆகும். இது செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விண்கல்லை ஆராயும் சைக் செயற்கைக் கோள் லேசர் தகவல்தொடர்புகளை சோதிக்கும் திறனும் கொண்டது. சைக் டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (DSOC) அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது விண்வெளியில் வெகு தொலைவிற்கு லேசர் தகவல்தொடர்புகளை சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெறும் 500 க்கு கிடைக்கும் மினி ஏசி! கோடையில் சூட்டைத் தணிக்கும் கூலான ஐடியா!
சைக் முதன்மையாக ரேடியோ அலைவரிசை தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துகிறது. ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக, லேசர் தகவல்தொடர்பு டெமோ வெற்றிகரமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒரு சமிக்ஞையை அனுப்பியுள்ளது. 140 மில்லியன் மைல் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம்.
DSOC ஆனது சைக் செயற்கைக் கோளின் ரேடியோ டிரான்ஸ்மிட்டருடன் வெற்றிகரமாக தொடர்பு கொண்டது. இது தகவல் மற்றும் பொறியியல் தரவுகளை விண்கலத்திலிருந்து நேரடியாக பூமிக்கு அனுப்ப அனுமதிக்கிறது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) பணிபுரியும் இந்தத் திட்டத்தின் செயல் தலைவரான மீரா சீனிவாசன் கூறுகையில், பாரம்பரிய முறைகளைக் காட்டிலும் லேசர் தகவல்தொடர்புகள் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்பதை மதிப்பிடுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
வருடம் முழுவதும் 25 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்!