Leo Trailer: லியோ ட்ரைலர் போட்டது ஒரு குத்தமா? ரோகிணி திரையரங்கை பந்தாடிய தளபதி விஜய் ரசிகர்கள்!
தளபதி விஜய் நடித்த, 'லியோ' படத்தின் டிரைலர் ரோகிணி திரையரங்கில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆரவாரம் செய்து திரையரங்கையே துவம்சம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Leo Trailer Screening in Rohini Theatre
தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியானது. தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும், அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாகவும், ரோகிணி திரையரங்கில் இன்று மாலை 6:30 மணிக்கு 'லியோ' படத்தின் டிரைலர் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Fans crowd in Rohini Theatre:
முதலில் இதற்க்கு அனுமதி அளிக்க காவல்துறை மறுத்த நிலையில், பின்னர் ஒருவழியாக ட்ரைலர் வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. ட்ரைலரையே திரையரங்கில் பாலபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து வரவேற்ற தளபதியின் ரசிகர்கள். ட்ரைலர் வெளியிடப்பட்ட ரோகிணி திரையரங்கின் முன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக, ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Fans Trashes in Chairs:
பின்னர், லியோ படத்தின் ட்ரைலர் திரையரங்கில் வெளியிட்டதை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கண்டு ரசித்தது மட்டும் இன்றி, திரையரங்கில் இருந்த சேர்களை, உடைத்து... சேர் மேல் ஏறி நின்று அட்ராசிட்டி செய்துள்ளனர். தற்போது இதுகுறித்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Rohini Theatres lose:
தளபதி ட்ரைலரை வெளியிட்ட குத்துக்காக தற்போது ஆயிரக்கணக்கில் ரோகிணி திரையரங்கிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். தளபதி பெயரை பெருமை படுத்துவது போல் பல நல்ல காரியங்களை விஜய் ரசிகர்கள் செய்தாலும், சில சமயங்களில் தளபதிக்காக இப்படி மாறுவது பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.