Leo Trailer: த்ரிஷா மரணம் முதல்... செகண்ட் பார்ட் லீடு வரை! 'லியோ' ட்ரைலரில் இந்த விஷயங்களை கவனிசீங்களா?
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 'லியோ' படத்தின் ட்ரைலர் சற்று முன்னர் வெளியானது. 2.43 நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், 2 நிமிடம் முழுக்க முழுக்க சண்டை, பரபரப்பு, துப்பாக்கி சத்தம் என ரசிகர்ளை வேறு ஒரு வைபுக்கு கொண்டு சென்று விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
Leo Trailer
ட்ரைலரை பார்த்து பல ரசிகர்கள், படம் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளதாக தெரிவித்து வந்தாலும், படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அதில் கால்வாசி கூட ட்ரைலரில் காட்டவில்லை என கூறி வருகிறார்கள். அதே போல் சிலர் ட்ரைலர் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.
Leo Trailer Fire in Internet
சரி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகியுள்ள, 'லியோ' படத்தின் ட்ரைலரில்... இந்த விஷயங்களை கவனித்தீர்களா? உங்களை சிந்திக்க வைக்கும் சில விவரங்களை இதில் பார்க்கலாம்.
Sandy master
படத்தின் துவக்கத்திலேயே சீரியல் கில்லராக சாண்டியின் காட்சிகள் இடம்பெறுவதை நீங்கள் பார்க்க முடியும். அவரின் வாயில் ரத்த இருப்பதையும் நோட் பண்ணி இருப்பீங்க. அதே போல் விஜயை துரத்தி வரும் விலங்கான நரி இனத்தை சேர்ந்த ஹைனா வாயிலும் ரத்த கரை இருக்கும். எனவே சாண்டி தான், சஞ்சய் தத் அல்லது அர்ஜுனின் கதாபாத்திரத்தின் சிறிய வயது கேரக்டரக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. காரணம் இருவருமே தளபதி விஜய்யை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள். வில்லனை தான் வெறிபிடித்த விலங்கு போல் லோகேஷ் காட்சி படுத்தியுள்ளார் என தெரிகிறது.
Vijay Childhood Character:
அதே போல் ஏற்கனவே, விஜய்யின் சிறிய வயது கதாபாத்திரத்தில் மேத்தியூ தாமஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த ட்ரைலர் அந்த சந்தேகத்தை, கிட்ட தட்ட உறுதி செய்வது போல் உள்ளது. காரணம் மேத்தியூ தாமஸ் எதிரியை நோக்கி அம்பு எரியும் போது, விஜய் எதிரிகளை நோக்கி துப்பாக்கியை காட்டுவது போல் இருக்கும் காட்சியையும் கொஞ்சம் நோட் பண்ணுங்க பாஸ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Trisha Death Suspecting Scene
அதே போல் ஏற்கனவே, விஜய்யின் சிறிய வயது கதாபாத்திரத்தில் மேத்தியூ தாமஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த ட்ரைலர் அந்த சந்தேகத்தை, கிட்ட தட்ட உறுதி செய்வது போல் உள்ளது. காரணம் மேத்தியூ தாமஸ் எதிரியை நோக்கி அம்பு எரியும் போது, விஜய் எதிரிகளை நோக்கி துப்பாக்கியை காட்டுவது போல் இருக்கும் காட்சியையும் கொஞ்சம் நோட் பண்ணுங்க பாஸ்.
Vijay Acting Duel Role:
அதே போல் விஜய் டபிள் ஆக்ஷனில் நடித்துள்ளாரா? என்கிற சந்தேகமும் இந்த ட்ரைலரை பார்த்த அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தை அதிகரிக்கும் விதமாக விஜய்யே தன்னுடைய மனைவி த்ரிஷாவிடம், என்னை போல ஒருத்தன் இருக்கான், என என்னை துரத்தினால் நான் என்ன பண்ணுவேன் என ஆக்ரோஷமாக பேசும் காட்சி இடம்பெற்றிருக்கும். பின்னர் அவரே ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புவதால்... ரெண்டு விஜய்யும் ஒரே விஜய் தானோ என ஒரு சிறு டவுட் எழுந்தது.
Who is Leo Das
சரி விஜய் டபிள் ஆக்ஷனாகவே இருந்தாலும், விஜய்யை வெறித்தனமான கேங் ஸ்டார் கும்பலை சேர்ந்த, சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் வலை போட்டு தேட காரணம் என்ன? அதன் பின்னணியில் ஒருவேளை லோகேஷ் கனகராஜின் படங்களில் இடம்பெறுவது போல் போதை பொருள் பின்னணிதான் இருக்குமோ?
Leo Second Part:
கடைசியாக ட்ரைலரிலேயே 'லியோ' படத்தின், செகண்ட் பார்ட்டின் லீடையும் லீக் செய்துள்ளார் லோகேஷ். ட்ரைலரின் முடிவில், கெளதம் மேனன் "நடந்தது என்னனு தெரியினும்னா, லியோ தான் உயிரோட வரவேண்டும் என கூறுவார்". எனவே முதல் பார்ட்? லியோ இருக்கிறாரா இல்லையா எங்கிற சஸ்பென்ஸுடன் நிறைவடைந்து... அடுத்த பார்ட்டில் இதற்கான விடையை ரிவீல் செய்யும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.