இது என்னடா புது குணசேகரனுக்கு வந்த சோதனை! முதல் நாளே கிழிகிழினு கிழித்த ஜனனி! நந்தினியின் கவுண்டர் வேற லெவல்!
எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் செம்ம மாஸாக, ஆதி குணசேகரன் இன்ட்ரோ கொடுத்த நிலையில்... தற்போது ஜனனி அவரை திட்டுவதும், விசாலாட்சி பேச்சுக்கு நந்தினியின் கவுண்ட்டருடன் கூடிய புரோமோ வெளியாகியுள்ளது.
Ethirneechal Serial
நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுந்த நிலையில், சீரியல் குழுவினரும் பல பிரபலங்களிடம் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக பிரபல எழுத்தாளரும், நடிகருமான, வேல ராமமூர்த்தியிடம் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க, மாரிமுத்து மரணம் அடைந்த அன்றைய தினமே சீரியல் குழுவினர், பேசியதாக அவரே பேட்டி ஒன்று தெரிவித்திருந்தார்.
New Gunasekaran Entry:
ஆனால் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால், இந்த சீரியலில் நடிக்காமல் போக கூட வாய்ப்புள்ளதாக தெரிவித்த இவரின் நிலையில்லாத பதிலால்... யார் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாகவே புதிய ஆதி குணசேகரன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று செம்ம மாஸாக ஆதி குணசேகரன் ஆக வேலா ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Police Attacket Kathir ana Gyanam
போலீசார் கதிர் மற்றும் ஞானத்திடம் ஆதி குணசேகரன் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, இருவருமே போலீஸ்காரர்களிடம் திமிராக பேசுவதால் போலீசாரிடம் தர்மஅடி வாங்குகிறார்கள். பின்னர் அதிரடியாக கருப்பு நிற ஜீப்பில் வந்து இறங்குகிறார் புதிய ஆதி குணசேகரனான வேல ராமமூர்த்தி. தன்னுடைய தம்பிகள் அடி வாங்கும் போது, யார்ல என் தம்பி அடிக்கிறது என்று குணசேகரன் கேட்க... ஞானமும் கதிரும் ஓடி வந்து தன்னுடைய அண்ணனை கட்டி அணைத்து பாச மழை பொழிகின்றனர். பின்னர் எதற்காக போலீசார் உங்களை அடிக்கின்றனர் என்று குணசேகரன் விசாரிக்க, உங்கள கொன்னுட்டோம்னு சொல்லி சக்தியும் ஜனனியும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று கதிர் அழுகிறார்.
Vela Ramamoorthy Intro Scene:
பின்னர் ஆவேசமாக என்னுடைய தம்பி என்று தெரிந்தும் உங்க மேல கைய வெச்சி இருக்காங்களா என்று குணசேகரன் போலீஸ் அதிகாரிகள் நெஞ்சில் மிதித்து அராஜகம் செய்கிறார். அண்ணன் வந்த துணிச்சலில் ஞானமும், கதிரும், போலீசாரை தாக்குகிறார்கள். பின்னர் சக்தியை பார்த்து இவன் இன்னும் குழந்தை மாதிரி தான் இருக்கான் என்று சொல்லிட்டு பாசமாக பேசி காரில் ஏறு வீட்டுக்கு போகலாம் என கூறிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
Today New Promo
இதை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், கோவில் வாசலில் குணசேகரன் வந்து அமர பக்கத்தில் கதிரும் - ஞானமும் அமர்கின்றனர். இதைத்தொடர்ந்து பேசும் ஜனனி "அடுத்தவங்களை பத்தி நீங்க எப்போதுமே கவலைப்படாதே இல்லல்ல... எல்லாமே உங்களுக்கு நடக்கணும், எப்ப தான் நீங்க மாற போறீங்களோ? என கோபமாக கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். பின்னர் விசாலாட்சி மூத்தவர் வந்துருவான், எல்லாரும் அலங்காரம் பண்ணிக்கிட்டு கீழே வாங்க என கூறுகிறார். இதை தொடர்ந்து பேசும் நந்தினி எங்களை என்ன பொண்ணு பாக்கவா வராங்க... என வேற லெவல் கவுண்டர் அடிக்கிறார்.
Janani Scolding Gunasekaran:
பின்னர் காரில் குணசேகரன் தன்னுடைய இரண்டு தம்பிகளுடன் வருவதும், ஜனனி சக்தி பைக்கில் வரும் காட்சிகளும் காட்டப்படுகிறது. காரில் வரும் போது ஈஸ்வரி அண்ணி தன்னை அடித்தது பற்றி கதிர் ஏதோ குணசேகரனிடம் பத்த வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. எனவே இன்றைய தினம் வீட்டில் என்னென்ன கலவரம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரம் இது என்னடா புது ஆதி குணசேகரனுக்கு வந்த சோதனை முதல் நாளே ஜனனி இப்படி திட்டி தீர்த்துள்ளார் என ரசிகர்கள் காமத் போட்டு வருகிறார்கள்.