இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டிய 'சூர்யாவின்' கங்குவா! ரிலீசுக்கு முக்கிய நாளை டார்கெட் செய்யும் படக்குழு!
நடிகர் சூர்யா நடிப்பில், ஃபேண்டஸி கதையம்சத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
Kanguva
இயக்குனர் சிவா, 'அண்ணாத்த' படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகினறனர்.
சூர்யா நடித்து வெளியான படங்களிலேயே மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. அதன்படி சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில், எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல் 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் 'கங்குவா' படக்குழுவினர் நேற்று தாய்லாந்து நாட்டிற்கு கிளம்பிய நிலையில், இன்று அதிகாலை தாய்லாந்து சென்றடைந்ததாகவும், நாளை முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு சுமார் 25 முதல் 30 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே இறுதி கட்ட படப்பிடிப்பு என்றும் கூறப்படுகிறது.
ஒருவழியாக பல தடைகளை தாண்டி, திட்டமிடப்பட்ட நாட்களில் படப்பிடிப்பு இயக்குனர் சிவா முடித்து விட்டதால், அடுத்ததாக இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த 'கங்குவா' படக்குழு தயாராகியுள்ளது. அதே போல் இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இந்த தகவல்... உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.