Prasanth Net Worth: நடிக்காமலேயே மாதம் தோறும் கோடிகளில் வருமானம்! பிரசாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் பல இளம் ரசிகர்களின் கனவு கண்ணனாக இருந்த நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் என்கிற அடையாளத்துடன் 1990 ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' என்கிற படத்தில் அரும்பு மீசையோடு ஹீரோவாக அறிமுகமானவர் பிரஷாந்த். இதை தொடர்ந்து, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
விஜய் - அஜித் போன்ற நடிகர்கள், திரையுலகில் நிலைத்து நிற்க போராடிய காலத்தில்... அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியவர் பிரஷாந்த். மேலும் இவரை மனதில் வைத்து, சில இயக்குனர்கள் கதை எழுதிய காலமும் உண்டு. அதே போல், 90'ஸ் காலகட்டத்தில் சாக்லெட் பாய்யாக வலம் வந்த இவருக்கு என பல பெண் ரசிகர்கள் இருந்தனர்.
பிரசாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1998-ஆம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து சில ஆக்ஷன் கதைகளில் கவனம் செலுத்த துவங்கினார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து, பிரஷாந்த் நடிப்பில் வெளியான ஜோடி, ஸ்டார், சாக்லேட், மஜுனு, தமிழ், குட்லக் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட காரணம், பிரசாந்தின் திருமண வாழ்க்கை தான். கிரஹலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர் பிரஷாந்த் தேர்வு செய்து நடித்த படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
தற்போது பிரஷாந்த் நம்பிக்கையோடு தன்னுடைய தந்தை இயக்கி - தயாரித்துள்ள அந்தகண் படத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான 'அந்தாதூண்' படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.
விஜய் - அஜித் 10 லட்சம் 20 லட்சம் சம்பளம் வாங்கிய போது 50 லட்சம் 60 லட்சம் சம்பளம் வாங்கிய பிரசாந்தின் திரையுலக வாழ்க்கை தற்போது டல் அடித்தாலும், நடிக்காமல் ஒவ்வொரு மாதமும் கோடிகளில் பணம் பார்த்து வருகிறாராம் பிரஷாந்த்.
பிரஷாந்த் முன்னணி நடிகராக இருந்த போது தி.நகரில் பிரமாண்ட இடம் ஒன்றை வாங்கி போட்டிருந்தார். தற்போது அந்த இடத்தில் பிரசாந்த் கோல்டு டவர் என்கிற 17 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. அதில் தான் உலகின் மிகப்பெரிய ஷோரூம்மான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. எட்டு மாடிகளில் மொத்தம் ஒரு லட்சம் சதுர அடியில் திறக்கப்பட்ட ஷோரூம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதைத் தவிர மற்ற மாடிகளிலும் பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டு மாதம் மாதம் இதன் மூலம் மட்டுமே பல லட்சம் பணம் பார்த்து வருகிறார்.
அதுமட்டும் இன்றி, பல்வேறு தொழில்களில் இன்வெர்ஸ் செய்துள்ளார். இதன் மூலமாகவும்... லட்ச கணக்கில் பணம் பார்த்து வருகிறார். மொத்தத்தில் இது மட்டுமே 1 கோடிக்கு மேல் கல்லாக்கட்டி வருகிறார். இது தவிர 5க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள், மற்றும் சென்னையில் பல வீடுகள் பிரஷாந்துக்கும் அவரின் அப்பாவுக்கும் பல சொத்துக்கள் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் படி 85 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது என கூறப்படுகிறது.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D