பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறேன்! மகள் ஜோவிகா பற்றி மனம் திறந்த வனிதா விஜயகுமார்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள், ஜோவிகா கலந்து கொண்டுள்ள நிலையில், வனிதா படவிழா ஒன்றில் கலந்து கொண்டபோது, ஜோவிகா பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Bigg boss Tamil season 7
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. பொதுவாக முதல் வாரத்தில், போட்டியாளர்களை ஜாலியாக இருக்க விட்டு, அடுத்தடுத்த வாரத்தில் தான்... கடுமையான டாஸ்குகள் மற்றும் தண்டனைகள் கொடுப்பார் பிக்பாஸ். ஆனால் இந்த முறை, முதல் வாரத்திலேயே கடுமையான டாஸ்குகள் இடம்பெற்றுள்ளதோடு... முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் நாமினேஷன் படலம் நடந்துள்ளது மட்டும் இன்றி, இந்த வாரம் ஐஷு, பாவா, ஜோவிகா, உள்ளிட்ட 6 போட்டியாளர்களின் ஒருவர் வெளியேறவும் உள்ளார்.
Jovika Nominated First Week
தன்னுடைய மகள் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்டுள்ளது பற்றி, ஏற்கனவே மிகவும் பெருமையாக கூறிய வனிதா, தற்போது படவிழா ஒன்றில் கலந்து கொண்டபோது... செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Vanitha Vijayakumar about Jovika
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன், ஜோதிகாவுக்கு என்ன சொல்லி அனுப்பி வைத்தீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஜெயிச்சுட்டு வந்திருந்தா? ஏதாவது என் பொண்ணுக்கு நான் சொல்லி அனுப்பி இருக்கலாம். ஆனா அப்படி எதுவும் நடக்கல. எல்லாருக்குமே ஒவ்வொரு தனித்துவமான குணம் இருக்கு, அவர்களுடைய அனுபவம் மற்றும் அவங்களுடைய கேரக்டரை யாருமே மாற்றக்கூடாது.
Vanitha Vijayakumar Speech
சினிமாவுல வேணும்னா மாத்தலாம். அவள் படம் நடிக்கும் போது... கண்டிப்பா என்னுடைய அபிப்ராயத்தை சொல்வேன். அதுல கண்டிப்பா என்னுடைய interference இருக்கும். காரணம் இவ்வளவு நாள், நான் சினிமாவுல நிறைய பார்த்து வளர்த்திருக்கேன். ஒரு பத்து படத்துல துணை இயக்குனராக பணியாற்றி உள்ளேன். நானும் படம் இயக்கி, தயாரிச்சிருக்கேன். அந்த அனுபவம் எனக்கு இருக்கு. அதனால ஏதோ ஒரு சஜ்ஜஷன் கொடுக்க முடியும்.
Leo Trisha Poster: ரத்தம் தெறிக்க.. த்ரிஷாவுக்கு கொல பயம் காட்டிய 'லியோ'..! வெளியான புதிய போஸ்டர்!
Jovika Quality:
ஆனா பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு ரியாலிட்டி ஷோ, இதில் அவங்களுக்கு இருக்கிற குவாலிட்டி தான் கவனிக்கப்படும். கண்டிப்பா ஜோவிகாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகிற குவாலிட்டி இருக்குன்னு எனக்கு தெரிஞ்சதால தான், அந்த தைரியத்துல தான் உள்ள அனுப்பிச்சி இருக்கேன். எனக்கு இந்த பொண்ணு மேல டவுட் இருந்திருந்தால் கண்டிப்பா அவளுடைய கேரியர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இவ்ளோ பெரிய ஒரு ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டேன். அதுவும் இவ்வளவு பெரிய ஒரு மேடையில் அவளை ராவ்வாக அனுப்பி ரிக்ஸ் எடுத்திருக்கேன். இந்த நிகழ்ச்சிக்கு ட்ரைனிங்லாம் கொடுக்க முடியாது.
Jovika plus in Bigg boss House:
ஜோவிகாவின் ஒரு தனித்தன்மை கொண்ட பெண். இதை இப்போது நான் சொல்ல கூடாது. நீங்களே அதை பார்த்து புரிஞ்சிக்குவீங்க அதற்காக தான் நான் உள்ளே அனுப்பி இருக்கேன். அதே போல் என்னுடைய ரிவியூ நிகழ்ச்சியில், கண்டிப்பாக யார் தப்பு செய்திருந்தாலும் சொல்வேன். என் மகள் தப்பி செய்தாலும் சுட்டிக்காட்டுவேன். என்னுடைய மகள் தப்பா எதுவும் செய்ய மாட்டாள் என்கிற நம்பிக்கையும் உள்ளது என ஒரு அம்மாவாக பேசியுள்ளார். நிகழ்ச்சி துவங்கிய 4 நாட்களில் ஜோவிகா செய்து வரும் சில விஷயங்கள் ரசிகர்களை கவர்த்திருந்தாலும், இதுவரை மிகவும் சைலெண்டாகவே விளையாடி வருகிறார். அதே போல் ஜோவிகா இதுவரை கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என எந்த சர்ச்சையில் சிக்கி கொள்ளாமல் விளையாடுவது இவரின் மிகப்பெரிய பிளஸ் எனலாம்.