Thug Life : "ஏமாத்திட்டீங்களே மணி சார்".. படத்திலிருந்து விலகிய ஹீரோஸ் - 8ம் தேதி வெளியாகும் நியூ அப்டேட்!

Thug Life : உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்தினம் இயக்கும் "தக் லைப்" திரைப்பட பணிகளை இன்று துவங்கிய நிலையில், தொடர்ச்சியாக இப்படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர தொடங்கியுள்ளது.

Jayam Ravi and Dulquer salman opt out of Maniratnams Thug life new glimpse coming soon ans

தமிழ் சினிமாவின் மிக மூத்த இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில், சுமார் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் "தக் லைப்" என்கின்ற திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். ஏற்கனவே சிம்பு இப்பட பணிகளை துவங்கிய நிலையில் இன்று முதல் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் தன் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். 

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் நாசர், நடிகர் வையாபுரி, நடிகை அபிராமி உள்ளிட்டோரும் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தக் லைப் படத்திலிருந்து வெளியான ஒரு புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடிக்க உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Thug Life : படப்பிடிப்பில் இணைந்த ஆண்டவர்.. அதிர வைக்கும் லுக்கில் கமல் & சிம்பு - கதையில் மணி வைத்த ட்விஸ்ட்!

இந்நிலையில் நாளை மறுநாள் 8ம் தேதி இப்படத்தில் இருந்து ஒரு கிலிம்ப்ஸ் காட்சி வெளியாகவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்பொழுது "தக் லைப்" படக்குழு வெளியிட்டுள்ளது. இது சிம்பு தொடர்பான வீடியோ என்று இணையத்தில் பரவலாக செய்திகள் பரவி வருகிறது. 

இந்த சூழலில் ஏற்கனவே நடிகர் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் இந்த படத்தில் இருந்து விலகி மீண்டும் இந்த படத்தில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வமாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகையால் கதையில் பல மாற்றங்கள் அமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Divya Bharathi : சிங்கிள் பீஸ் ஆடை.. தொடையழகில் தாராளம் காட்டும் கவர்ச்சி கன்னி திவ்யா பாரதி - ஹாட் பிக்ஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios