நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..

மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உடல் அவரது சொந்த ஊரான கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ  கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share this Video

மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் உடல் நேற்றைய தினம் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்து இன்று காலை ஜெயக்குமாரின் மகனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை ஜெயக்குமாரின் உயிரினத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சியின் பிரமுகராக இருந்தாலும் தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடமும் காவல்துறையினரிடமும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார் மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கமிட்டி அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை அறிக்கையை தேசிய தலைமை இடம் வழங்குவோமென தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஜெயக்குமாரின் உடல்நிலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் கொண்டுவரப்பட்டது அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அருகிலுள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தில் அடக்க ஆராதனை நடைபெற்றது. அடக்க ஆராதனை நிறைவு பெற்ற பின்னர் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Video