Weapon : ஆண்டவர் ஸ்டைலில் "கோஸ்டாக" மாறிய சத்யராஜ்.. சூப்பர் ஹியூமன் படமா? - வெளியான வெப்பன் பட ட்ரைலர்!

Weapon Trailer : பிரபல நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "வெப்பன்" ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

First Published May 17, 2024, 11:58 PM IST | Last Updated May 17, 2024, 11:58 PM IST

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக மிகச் சிறந்த நடிகராக வலம் வருபவர் தான் சத்யராஜ். கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கமல்ஹாசனின் "சட்டம் என் கையில்" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கினார் சத்யராஜ். தனது மிகச் சிறந்த நடிப்பு திறமையால் வெகு சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு, ஒரே ஆண்டில் 24 திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் பயணித்து வந்தார் சத்யராஜ். அவருடைய இந்த 44 ஆண்டு கால திரையுலக பயணத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் கனகச்சிதமாக தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் அவர் என்றால் அது மிகையல்ல.

இந்த சூழ்நிலையில் குகன் சென்னியப்பன் என்பவருடைய இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள "வெப்பன்" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் சத்யராஜ். எம் எஸ் மன்சூர் தயாரித்து வழங்கும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் வசந்த் தெரிவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 

கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு சூப்பர் ஹுமன் திரைப்படமாக "வெப்பன்" திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video Top Stories