Asianet News TamilAsianet News Tamil

Hitlist Trailer: சைக்கோ கொலைகாரனின் வெறியாட்டம்.. பதற வைக்கும் காட்சிகளோடு வெளியான 'ஹிட்லிஸ்ட்' பட ட்ரைலர்!

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ள, 'ஹிட்லிஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published May 17, 2024, 6:32 PM IST | Last Updated May 17, 2024, 6:32 PM IST

அறிமுக இயக்குனர்கள் சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவர் இயக்கத்தில், கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஹிட்லெஸ்ட். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், முனிஷ் காந்த், கிங்ஸ்லி, சித்தாரா, ராமச்சந்திரா ராஜு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். சி சத்யா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ராம்சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜான் ஆபிரகாம் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஒரு சைக்கோவின் வெறியாட்டத்தை கண்முன் நிறுத்தி உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே இப்படம் ராட்சசன், போர் தொழில், போன்ற படங்களின் வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Video Top Stories