MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நண்பர்களே புது கார் வாங்கியாச்சு! பரம்பரையிலேயே புதுகார் வாங்கிய முதல் ஆள் நான் தான் - ஜிபி முத்து நெகிழ்ச்சி

நண்பர்களே புது கார் வாங்கியாச்சு! பரம்பரையிலேயே புதுகார் வாங்கிய முதல் ஆள் நான் தான் - ஜிபி முத்து நெகிழ்ச்சி

பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸ் ஆன நடிகர் ஜிபி முத்து, புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 10 2023, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
GP Muthu

GP Muthu

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து. சொந்த ஊரிலேயே மர வேலை செய்துவந்த இவர், டிக்டாக்கில் வீடியோ போட்டு பேமஸ் ஆனார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் டிக் டாக் தடை செய்யப்பட்டதோடு, அப்போது தொழிலும் சரிவர ஓடாததால் மனமுடைந்து போன ஜிபி முத்து, தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்து காப்பாற்றினர். பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் ஜிபி முத்து.

24
GP Muthu new car

GP Muthu new car

யூடியூப்பில் தனக்கு வரும் கடிதங்களை வாங்கி படித்துக் காட்டி அதனை வீடியோவாக வெளியிட்டார் ஜிபி முத்து. அவரின் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் படிப்படியாக அவருக்கு வருமானமும் வரத் தொடங்கியது. யூடியூப் மூலம் பேமஸ் ஆன ஜிபி முத்துவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் ஜிபி முத்து.

இதையும் படியுங்கள்... அடுத்த ஆதி குணசேகரனா நடிக்க கேட்டது நிஜம் தான்... ஆனா! எதிர்நீச்சல் டீமுக்கு வேல ராமமூர்த்தி கொடுத்த டுவிஸ்ட்

34
GP Muthu KIA carens car

GP Muthu KIA carens car

முதல் வாரத்திலேயே உலகளவில் ரீச் ஆன ஜிபி முத்துவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், ஒரே வாரத்தில் தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என கூறி வெளியேறிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அந்த வகையில் அஜித்தின் துணிவு, சன்னி லியோன் உடன் ஓ மை கோஸ்ட், போன்ற திரைப்படங்களில் நடித்த ஜிபி முத்து, அண்மையில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி கலக்கினார்.

44
GP Muthu family

GP Muthu family

சினிமாவில் நடித்து நன்கு சம்பாதித்து வந்தாலும், யூடியூப்பில் தொடர்ந்து வீடியோவும் போட்டு வருகிறார் ஜிபி முத்து. அந்த வகையில் அவர் தற்போது புது கார் வாங்கியபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் பழைய கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்த ஜிபி முத்து, தற்போது புதிதாக கியா கேரன்ஸ் காரை வாங்கி இருக்கிறார். தனது பரம்பரையிலேயே புது கார் வாங்கிய முதல் ஆள் நான் தான் என நெகிழ்ச்சியுடன் கூறி உள்ள ஜிபி முத்து, அந்த புது காரில் தனது குடும்பத்தினருடன் ஜாலியாக ரைடு சென்ற காட்சிகளையும் அந்த வீடியோவில் போட்டுள்ளார். ஜிபி முத்து வாங்கியுள்ள அந்த காரின் விலை ரூ.12 முதல் 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிகில் ராயப்பன் பாதி... கைதி மீதி! மாமியார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தின் மிரட்டலான டீசர் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி
கியா கேரன்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved