Asianet News TamilAsianet News Tamil

பிகில் ராயப்பன் பாதி... கைதி மீதி! மாமியார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தின் மிரட்டலான டீசர் இதோ

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள சைரன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jayam Ravi as Jailer in his next movie siren teaser released as Birthday special gan
Author
First Published Sep 10, 2023, 11:37 AM IST | Last Updated Sep 10, 2023, 11:37 AM IST

ஜெயம் ரவி நடிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம் சைரன். இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இவர் அஜித்தின் விஸ்வாசம், பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதுமட்டுமின்றி நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சைரன் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இவர் நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் ஆவார். இதற்கு முன் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு, பூமி போன்ற திரைப்படங்களை தயாரித்த சுஜாதா, தற்போது அவருடன் கூட்டணி அமைக்கும் மூன்றாவது திரைப்படம் சைரன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பர்த்டே ஸ்பெஷல்... வாரிசு நடிகராக இருந்தும் தனி ஒருவனாக சம்பாதித்த ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

siren jayam ravi

சைரன் படத்தில் ஜெயம் ரவியுடன் யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை செல்வக்குமார் மேற்கொண்டுள்ளார். நடிகர் ஜெயம் ரவி இன்று 43-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அதையொட்டி சைரன் படத்தின் டீசரை Preface என்கிற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி சிறைக்கைதியாக நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், டீசரில் சிறையிலேயே அவர் ஒர்க் அவுட் செய்வதுபோலவும், பின்னர் ஜிப்பாவோடு டான் லுக்கில் வலம் வரும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இறுதியாக ஒரு கையில் விளங்கு மற்றொரு கையில் ரத்தக் கறையுடன் கூடிய பெரிய கத்தி என பிகில் ராயப்பனும், கைதி கார்த்தியும் கலந்த கலவையான ஒரு லுக்கில் அமர்ந்திருக்கிறார் ஜெயம் ரவி. சைரன் பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... இதுவே முதல்முறையாம்.. மாஸ் காட்டும் ஜெயம் ரவியின் ரசிகர்கள் - Time Squareல் ஒரு பர்த்டே Mashup!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios