இதுவே முதல்முறையாம்.. மாஸ் காட்டும் ஜெயம் ரவியின் ரசிகர்கள் - Time Squareல் ஒரு பர்த்டே Mashup!
பிரபல தமிழ் நடிகர் ஜெயம் ரவி நாளை செப்டம்பர் 10ஆம் தேதி தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதனை அடுத்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஒரு மாபெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
சினிமா குடும்பத்திலிருந்து வந்த ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அவர் கதையின் நாயகனாக அறிமுகமானது தான் ஜெயம் திரைப்படம், காரணம் அவர் அதற்கு முன்பாகவே ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
முதல் திரைப்படத்திலேயே பெரும் வரவேற்பு பெற்ற ஜெயம் ரவி அதன் பிறகு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியன் மற்றும் தாம் தூம் என்று தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வராகவே நடித்து தன் புகழை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளார் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டில் ஏற்கனவே அவருடைய அகிலன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இறைவன், ஜெயம் ரவியின் முப்பதாவது திரைப்படம், சைரன், ஜீனி மற்றும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என்று மொத்தம் ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நாளை அவர் தனது 43-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், தமிழக திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் நடிகரின் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை அமெரிக்காவில் உள்ள டைம் ஸ்கொயர் பகுதியில் கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி நாளை காலை 5 மணிக்கு இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் ஒரு mashup ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.