மகாபலிபுரத்தில் ஒரு மஞ்சக்காட்டு மைனா.. புது வீட்டில் நடந்த கிரகப்பிரவேசம் - கலக்கும் அருண் விஜய் அக்கா அனிதா!
தமிழில் பிரபலமான பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளும், பிரபல நடிகர் அருண் விஜய்க்கு சகோதரியுமான அனிதா விஜயகுமார் புதிய வீடு ஒன்று கட்டியுள்ள நிலையில், அதனை தொடர்ந்து மஞ்சள் நிற ஆடை அணிந்து தனது சொந்தங்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
Doctor Anitha Vijayakumar
மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது முதல் மனைவியான முத்துக்கண்ணு ஆகிய இருவருக்கும் பிறந்தவர்கள் தான் கவிதா விஜயகுமார் (நடிகை), அனிதா விஜயகுமார் (மருத்துவர்) என்ற இரண்டு மகள்கள். அதே போல விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியின் மகன் தான் பிரபல கோலிவுட் நடிகர் அருண் விஜய்.
Anitha Vijayakumar
குடுமபத்தில் அனைவரும் திரைத்துறையில் இருந்தாலும், இவர் மட்டும் படங்களுக்கு நோ சொல்லிவிட்டு மருத்துவம் பயின்றுள்ளார். தற்போது தனது கணவருடன் கத்தார் நாட்டில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார் அனிதா விஜயகுமார்.
Doctor Anitha House Warming Function
தற்போது சென்னையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ள அனிதா, அந்த வீட்டின் கிரகபிரவேச விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடு மஹாபலிபுரம் அருகே கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Doctor Anitha
மேலும் தனது சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, மஞ்சள் நிற ஆடை அணிந்து, மகாபலிபுரத்தில் தனது நேரத்தை மிக அழகாக செலவளித்துள்ளார் டாக்டர் அனிதா விஜயகுமார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
திரிஷா நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'தி ரோட்'! ரிலீஸ் தேதி அறிவிப்பு!