Asianet News TamilAsianet News Tamil

திரிஷா நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'தி ரோட்'! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு, திரிஷா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'தி ரோட்' திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது.
 

Trisha acting the road movie release date announced
Author
First Published Sep 9, 2023, 5:17 PM IST

AAA சினிமா பிரைவெட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் 'தி ரோட்' திரைப்பட வெளியீடு தேதி அட்டகாசமான பின்னணி இசையோடு டீஸர் வடிவில் அறிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் தி ரோட் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது . இத்திரைப்படம் திரிஷாவின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அக்டோபர் 19-ல் லியோ வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே தி ரோட் படம் வெளியாவதால் திரிஷா ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளார்கள். மேலும் திரிஷாவிற்க்கு  "சவுத் குயின்" என்கிற பட்டத்தை முதல் முறையாக தி ரோட் திரைப்பட குழுவினர் திரிஷா பெயருடன் இணைத்து வெளிட்டதில் திரிஷா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Trisha acting the road movie release date announced

சீரியல் இனி செட் ஆகாது! கநடிப்புக்கு குட்-பை சொல்லிட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி!

"திரிஷா" உடன் "சார்பட்டா பரம்பரை "புகழ் டான்சிங் ரோஸ் "சபீர்", சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, லட்சுமி பிரியா, செம்மலர் அன்னம், ராட்ச்சசன் வினோத், கருப்பு நம்பியார், நேகா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Trisha acting the road movie release date announced

கிராமமே திரண்டு வந்து மாரிமுத்துவை வழியனுப்பியது..! கண் கலங்க வைக்கும் இறுதி ஊர்வலம் புகைப்படங்கள்..!

மேலும் இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'தி ரோட்' திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் தெரிவித்துள்ளார். இது சில உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதால் படம் முழுவதும் திரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததோடு ,  அச்சம்பவங்கள் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று எந்த சமரசமும் இல்லாமல் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது என தெரிவித்துள்ளார். 

Trisha acting the road movie release date announced

என்ன தலைவா இப்படி சிக்கிட்ட! 'ஜவான்' படம் இந்த தமிழ் படத்தின் அட்ட காப்பியாமே? அட்லீயை அலற விடும் நெட்டிசன்கள்

சார்பட்டா மற்றும் கிங் ஆப் கோத்தா திரைப்படத்திற்கு பிறகு "டான்சிங் ரோஸ்" சபீர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் கதாபாத்திர வடிவமைப்பும் , அதை அவர் கையாண்ட விதமும் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருப்பதோடு சபீரீன் திரை பயணத்தில்  இது மிக முக்கியமான திரைப்படமாக அமையும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை செப்டம்பர் மூன்றாவது வாரம் திரை பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios