கிராமமே திரண்டு வந்து மாரிமுத்துவை வழியனுப்பியது..! கண் கலங்க வைக்கும் இறுதி ஊர்வலம் புகைப்படங்கள்..!
மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
திரைப்பட இயக்குனரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து நேற்று காலை சென்னையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பின்னர் சென்னையில் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று காலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைதேரிக்கு அதிகாலை 6:00 மணி அளவில் அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
பின்னர் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பசுமலைதேரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடத்திய பின்னர், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட இறுதி ஊர்வல வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் அந்த கிராமத்தில் உள்ள, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே கலந்து கொண்டு வழியனுப்பிய காட்சிகள் பார்ப்பவர்கள் கண்களையே குளமாகியது.
மாரிமுத்து உடல் காற்றோடு கரைந்து போனாலும், அவருடைய நினைவுகள் என்றும் மனதை விட்டு நீங்காது என்பது மட்டும் உறுதி. அவரின் உடலை அடக்கம் செய்து விட்டு, கனத்த இத்துடன் அவருடைய குடும்பத்தினர் உள்ளனர்.