MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பர்த்டே ஸ்பெஷல்... வாரிசு நடிகராக இருந்தும் தனி ஒருவனாக சம்பாதித்த ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பர்த்டே ஸ்பெஷல்... வாரிசு நடிகராக இருந்தும் தனி ஒருவனாக சம்பாதித்த ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 10 2023, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jayam Ravi

Jayam Ravi

எடிட்டர் மோகனின் மகனான ஜெயம் ரவி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முன்னர், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயம் ரவியை, ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அவரது தந்தை மோகன். அப்படத்தின் மூலம் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜாவும் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Jayam Ravi photos

Jayam Ravi photos

அப்படத்தின் தலைப்பை போலவே அவர்களுக்கு முதல் படமே ஜெயமாக அமைந்தது. ஜெயம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என வரிசையாக ஜெயம் ரவியை வைத்து ஹிட் படங்களை கொடுத்தார் ராஜா. இதனால் ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனாலும் அவர் 25 படங்களில் தான் நடித்திருக்கிறார்.

35
Jayam Ravi Birthday

Jayam Ravi Birthday

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தன. மணிரத்னம் இயக்கிய அந்த மாஸ்டர் பீஸ் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கைவசம் சைரன், இறைவன், தனி ஒருவன் 2 உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்... இதுவே முதல்முறையாம்.. மாஸ் காட்டும் ஜெயம் ரவியின் ரசிகர்கள் - Time Squareல் ஒரு பர்த்டே Mashup!

45
Jayam Ravi family

Jayam Ravi family

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ், டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.

55
Jayam Ravi Net Worth

Jayam Ravi Net Worth

இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். நடிகர் ஜெயம் ரவி, வாரிசு நடிகராக இருந்தாலும், அவரின் திறமையும், விடாமுயற்சியும் தான் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.93 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வனுக்கு முன்னர் வரை ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வந்த ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் தற்போது ரூ.8 முதல் 10 கோடி வரை வாங்கி வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... இது வீடா இல்ல அரண்மனையா! தியேட்டர் வசதியுடன் விஜயகுமார் மகள் கட்டிய சொகுசு பங்களாவின் ஹோம் டூர் வீடியோ இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved