Asianet News TamilAsianet News Tamil

இது வீடா இல்ல அரண்மனையா! தியேட்டர் வசதியோடு அனிதா விஜயகுமார் கட்டிய சொகுசு பங்களாவின் ஹோம் டூர் வீடியோ இதோ

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் சென்னையில் புதிதாக கட்டியுள்ள பிரம்மாண்ட பங்களாவின் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது.

Vijayakumar son Arun Vijay Sister Anitha Vijayakumar brand new chennai home tour video viral
Author
First Published Sep 10, 2023, 9:37 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என இரண்டு மனைவிகள் உண்டு. இதில் விஜயகுமாரின் முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதே போல் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என மூன்று மகள் உள்ளனர். விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா கடந்த 2013ம் ஆண்டே காலமாகிவிட்டார்.

தற்போது தன் முதல் மனைவி முத்துக்கண்ணு உடன் வசித்து வரும் விஜயகுமார், 80 வயதிலும் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் அவரது மகன் அருண் விஜய்யும் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். விஜயகுமாரின் வீட்டில் இருந்து சினிமா பக்கம் தலைகாட்டாத இருவர் என்றால் அது அவரது மகள்கள் கவிதா மற்றும் அனிதா தான். அவர்கள் இருவருமே தொழிலதிபர்களை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர்.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் குமார் பேத்திக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!

Vijayakumar son Arun Vijay Sister Anitha Vijayakumar brand new chennai home tour video viral

விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர் ஆவார். இவரது மகள் தியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே அண்மையில் சென்னையில் புதிதாக சொகுசு வீடு ஒன்றை கட்டி முடித்து அதற்கு கிரஹப்பிரவேசமும் நடத்தினார் அனிதா. மகள் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு நடிகர் விஜயகுமார் தனது மகன், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளோடு படையெடுத்து வந்து வாழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் தாங்கள் பல கோடி செலவழித்து கட்டிய கனவு இல்லத்தின் ஹோம் டூர் வீடியோ ஒன்றை விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு அரண்மனை போல இருக்கும் அந்த வீட்டில் தியேட்டர் வசதியும் இருக்கிறது. அதுமட்டுமின்றி அதிநவீன வசதிகளுடன் கூடிய அறைகள், பெட்ரூம், பூஜை அறை என அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்கிறது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மகாபலிபுரத்தில் ஒரு மஞ்சக்காட்டு மைனா.. புது வீட்டில் நடந்த கிரகப்பிரவேசம் - கலக்கும் அருண் விஜய் அக்கா அனிதா!

Follow Us:
Download App:
  • android
  • ios