MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அடுத்த ஆதி குணசேகரனா நடிக்க கேட்டது நிஜம் தான்... ஆனா! எதிர்நீச்சல் டீமுக்கு வேல ராமமூர்த்தி கொடுத்த டுவிஸ்ட்

அடுத்த ஆதி குணசேகரனா நடிக்க கேட்டது நிஜம் தான்... ஆனா! எதிர்நீச்சல் டீமுக்கு வேல ராமமூர்த்தி கொடுத்த டுவிஸ்ட்

மாரிமுத்து மறைவை அடுத்து ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என நடிகர் வேல ராமமூர்த்தி கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 10 2023, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Marimuthu, vela ramamoorthy

Marimuthu, vela ramamoorthy

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் மாரிமுத்து. சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியபோதும் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த சீரியலின் மூலம் சோசியல் மீடியா சென்சேஷனாகவும் உருவெடுத்தார் மாரிமுத்து. இவர் இல்லாத மீம்ஸ் இல்லை என சொல்லும் அளவுக்கு சமூக வலைதளங்களிலும் மாரிமுத்துவின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது.

25
Ethirneechal Marimuthu

Ethirneechal Marimuthu

இப்படி தினசரி இல்லங்களில் விரும்பி பார்க்கும் சீரியலாக எதிர்நீச்சல் இருந்ததற்கு முக்கிய காரணம் மாரிமுத்து தான். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி நடிகர் மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேச சென்றபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனே காரை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார் மாரிமுத்து. ஆனால் அங்கு காரை பார்க்கிங் செய்துவிட்டு இறங்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

35
Adhi Gunasekaran

Adhi Gunasekaran

மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் உடலுக்கு சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று பிற்பகல் மாரிமுத்துவின் உடல் தேனி அருகே உள்ள அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. மாரிமுத்துவின் இறுதி ஊர்வலத்தில் ஊர்க்காரர்கள் முழுவதும் கண்ணீர்மல்க கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியது காண்போரை கண்கலங்க செய்தது.

இதையும் படியுங்கள்... கிராமமே திரண்டு வந்து மாரிமுத்துவை வழியனுப்பியது..! கண் கலங்க வைக்கும் இறுதி ஊர்வலம் புகைப்படங்கள்..!

45
G Marimuthu passed away

G Marimuthu passed away

எதிர்நீச்சல் தொடரின் முதுகெலும்பாக இருந்ததே மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கேரக்டர் தான். அவருக்கு பின் அந்த கேரக்டரில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வரும் நிலையில், மாரிமுத்துவுக்கு பதிலாக பிரபல வில்லன் நடிகரான வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. வேல ராமமூர்த்தியும் ஒரு சாயலில் மாரிமுத்து போலவே இருப்பார் என்பதால் அவர் கச்சிதமான தேர்வாக இருப்பார் என அனைவரும் கூறி வந்தனர்.

55
vela ramamoorthy

vela ramamoorthy

இந்தநிலையில், எதிர்நீச்சல் தொடரில் நடிப்பது குறித்து வேல ராமமூர்த்தியே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : “அண்மையில், மாரிமுத்துவும் நானும் சேர்ந்து ஒரு படத்தில் அண்ணன், தம்பியாக நடித்து வந்தோம். ஆதி குணசேகரனாக நடிக்க வைப்பது குறித்து சேனல் தரப்பில் இருந்து பேசினார்கள். ஆனால் தற்போது நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் சீரியலில் நடிக்க நேரம் ஒதுக்க முடியுமானு தெரியல.

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பது நிஜம் தான். ஆனா நான் இன்னும் அதுபற்றி எந்தவித முடிவும் எடுக்கவில்லை என சொல்லி இருக்கிறார். வேல ராமமூர்த்தி இப்படி சொல்லிவிட்டதால் அவரின் இறுதி முடிவுக்காக எதிர்நீச்சல் குழு காத்திருக்கிறது. 

இதையும் படியுங்கள்... மாரிமுத்து மரணத்தால் 'ஏதிர்நீச்சல்' சீரியலில் ஏற்பட்ட மாற்றம்! அடுத்த ஆதி குணசேகரன் இந்த வெள்ளித்திரை பிரபலமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved