ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து திடீரென கழன்று ஓடிய சக்கரம்; இலவச பேருந்துக்காக காத்திருந்து ஏறிய பெண்கள் சோகம

மயிலாடுதுறை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடிய நிலையில், அதில் பயணித்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

An accident occurred in Mayiladuthurai when the wheel of a government bus suddenly fell off vel

தமிழகத்தில் சமீப காலமாக அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்து சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து விமர்சனம் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது, செல்லும் வழியில் படிக்கட்டு தனியாக கழண்டு விழுந்தது, கோடை மழையின் போது பேருந்தில் உள்ளே சரசரவென மழை பெய்தது என அரசு பேருந்துகள் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. 

அரசு சொகுசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி, அரிவாள்; நெல்லையில் பரபரப்பு

இந்நிலையில், மற்றொரு சம்பவமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ளது வடரங்கம் கிராமம். அக்கிராம மக்கள் அனைவரும்  பள்ளி, கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம் என அனைத்து தேவைகளுக்கும் அருகில் உள்ள சீர்காழி நகரத்தையே சார்ந்து உள்ளனர். அப்பகுதி மிகவும் பின்தங்கிய கிராமம் என்பதால் அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரசு பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருத்துவகல்லூரி மருத்துவர்கள்? அரியலூரில் பொமக்கள் சாலை மறியல்

இந்நிலையில் வடரங்கத்தில் இருந்து சீர்காழி நோக்கி A8 என்ற அரசு பேருந்து பணகாட்டாங்குடி பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு  வந்தது. எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் இடது புற முன் சக்கர கழண்று பேருந்துக்கு முன்னே தனியாக சாலையில் ஓடி உள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தினார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios