மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
Rain: தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் கடும் பனிபொழிவு நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் புழுக்கத்தால் பொதுமக்கள் இப்போதே வெந்து தணிந்து வருகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. அப்படி இருந்த கொங்கு மண்டலம், விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியால் சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதா என சென்னை வானிலை மையம் லேட்டஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
லேசான மழைக்கு வாய்ப்பு
அதேபோல் மார்ச் 01 மற்றும் 02 மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் எச்சரிக்கை
மார்ச் 1ம் தேதி முதல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

