MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sukanya Daughter Photo: அடேங்கப்பா... சும்மா ஹீரோயின் போல் இருக்கும் நடிகை சுகன்யாவின் மகள்! வைரலாகும் போட்டோ!

Sukanya Daughter Photo: அடேங்கப்பா... சும்மா ஹீரோயின் போல் இருக்கும் நடிகை சுகன்யாவின் மகள்! வைரலாகும் போட்டோ!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை சுகன்யா தன்னுடைய மகளை பொத்தி பொத்தி வளர்க்கும் நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
manimegalai a
Published : Dec 27 2023, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகை சுகன்யா ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார், இவருடைய உண்மையான பெயர் ஆர்த்தி தேவி. இவரின் நடனத்தையும், அழகையும் கண்டு வியர்ந்த இயக்குனர் பாரதிராஜா, தான் இயக்கிய 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்ததோடு மட்டும் இன்றி, சினிமாவுக்காக ஆர்த்தி தேவிக்கு சுகன்யா என பெயர் வைத்தார்.

27

முதல் படத்தின் வெற்றியால்... தமிழ் ரசிகர்கள் மற்றும் இயக்குநர்களால் கவனிக்கப்படும் ஹீரோயினாக சுகன்யா மாறிய நிலையில், இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, போன்ற படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

காரி துப்பி... மணியிடம் கொடுத்த பூர்ணிமா!! வலுக்கும் கண்டனம்... கண்டிப்பாரா கமல்?

37

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படத்தில், சுகன்யா கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் சுகன்யா நடிக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. மேலும் 90-களில் ஹீரோக்களாக கலக்கிய, ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார்.
 

47

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள சுகன்யா, நடிப்பை தாண்டி... இசையமைப்பாளர், டான்சர், சிங்கர் என பன்முக திறமையாளராக அறியப்படுகிறார்.

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி.. காமெடி நடிகைக்கு திடீர் என நடந்து முடிந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!
 

57

பரபரப்பாக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே... அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே வருடத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்திற்கு பின்னர்... தன்னுடைய பெண் குழந்தையுடன் சென்னைக்கு வந்த சுகன்யா தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

67

விவாகரத்துக்கு பின்னர் திரைப்படங்களில் அக்கா, அண்ணி போன்ற வேடங்களிலும்... சீரியல்களில் கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். சுகன்யா நடித்த ஆனந்தம் சீரியல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்ட சீரியலாக உள்ளது. 

TV Actors Marriage: KPY தீனா, ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா என 2023-ல் திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்கள்!

77

தன்னுடைய மகளை... சிங்கிள் மதராக இருந்து மீடியா கண்களில் புலப்படாமல் பொத்தி பொத்தி வளர்த்து வந்தார். தற்போது சுகன்யாவின் மகள் டீன் ஏஜ்ஜை கடந்து விட்ட நிலையில்... சமீபத்தில் தன்னுடைய அம்மா மற்றும் உறவினர்களுடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது. சுகன்யாவின் மகளை பார்த்து நெட்டிசன்கள் சும்மா ஹீரோயின் போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved