டிக்கெட் டூ ஃபின்னாலே டாஸ்கில் பூர்ணிமா, மணியிடம் முயலை கொடுக்கும்போது காரி துப்பு கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு பார்வையாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி... இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், போட்டியாளர்களுக்கு தற்போது நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை கொடுத்துள்ள பிக்பாஸ் அதற்காக தங்க முயல் டாஸ்க் ஒன்றையும் வைத்துள்ளார். இந்த போட்டியில் இருந்து ஏற்கனவே ரவீனா, தினேஷ், விசித்ரா ஆகியோர் தோல்வியை தழுவி வெளியேறினர்.

அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா இருவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்பதால் மேற்பார்வையாளர்களாக உள்ளனர். மீதம் உள்ள, விஷ்ணு, மாயா, பூர்ணிமா, மணி ஆகியோர் மத்தியில் இந்த டாஸ்க் நடந்த நிலையில், பூர்ணிமா இந்த விளையாட்டில் தோற்ற பின்னர்... தன்னிடம் உள்ள முயலை, காரி துப்பி மணியிடம் கொடுத்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பூர்ணிமாவின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலர் தங்களின் கண்டனத்தை எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே மாயா மற்றும் பூர்ணிமா எவ்வளவு கீழ்த்தனமான செயல்களை செய்தாலும், அதனை அவர்கள் காமெடிக்காக செய்ததாக சொன்னால் ஏற்றுக்கொள்ளும் கமல்... பூர்ணிமாமாவின் இந்த செயலையாவது தட்டி கேட்பாரா? என பலர் கொந்தளித்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த குறிப்பிட்ட வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் டிக்கெட் டூ ஃபின்னாலே டாஸ்கில் வெற்றி பெற்று மணி அல்லது விஷ்ணு ஃபைனலுக்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…