MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரபல நடிகரின் முன்னாள் மனைவி.. காமெடி நடிகைக்கு திடீர் என நடந்து முடிந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி.. காமெடி நடிகைக்கு திடீர் என நடந்து முடிந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதிக்கு திடீர் என இரண்டாம் திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 26 2023, 09:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சன் மியூசிக் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக அறிமுகமாகி... பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் காஜல் பசுபதி. இதை தொடர்ந்து, மெல்ல மெல்ல சீரியல்களில் நடிக்க துவங்கினார். பின்னர், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். 
 

26

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகரப்பு 2 என தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார்.

Ayalaan Audio Launch: 'அயலான்' ஆடியோ லான்ச் மகள் - மகனுடன் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி!
 

36

படு பிஸியான பிரபலமாக வலம் வந்த காஜல்... நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை சென்று... இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்துக்கு காஜல் தான் முக்கிய காரணம் என்பதையும் தெரிவித்தார்.
 

46

இதையடுத்து, காஜல் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நிலையில்... 70-ஆவது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டின் உள்ளே காஜல் இருந்த போது சாண்டி தன்னுடைய ரசிகையான சில்வியா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சாண்டி தற்போது நடன இயக்குனர் என்பதை தாண்டி பல படங்களில் நடிகராகவும் கலக்கி வருகிறார்.

TV Actors Marriage: KPY தீனா, ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா என 2023-ல் திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்கள்!
 

56

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, காஜல் திரையுலக வாழ்க்கையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவ்வப்போது... விதவிதமான போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது தனக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

66

திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு.. ஒருவழியாக எனக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது. திடீர் என நடந்ததால் சொல்லமுடியவில்லை என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில்... காஜலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து

புடிச்சாலும் புளியங்கொம்பு.. ராதா மகள் கார்த்திகாவின் கணவர் ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வருகிறது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved