MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • TV Actors Marriage: KPY தீனா, ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா என 2023-ல் திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்கள்!

TV Actors Marriage: KPY தீனா, ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா என 2023-ல் திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்கள்!

இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த சின்னத்திரை பிரபலங்கள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

3 Min read
manimegalai a
Published : Dec 26 2023, 05:07 PM IST| Updated : Dec 26 2023, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா, தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் காமெடி வேடத்திலும், குணசித்ர வேடத்திலும் நடித்து வரும் நிலையில்... இந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய பெற்றோர் பார்த்து முடிவு செய்த, பிரகதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

213

'அபியும் நானும்',' மிஸ்டர் மனைவி' போன்ற சீரியல்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும், நடிகர் தமிழ்ச்செல்வன் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பூர்ணிமாவை, இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

நடிப்புக்கு எதிராக சதி.. படிப்பில் சாதித்த காமெடி நடிகர்! B.Lit பர்ஸ்ட் கிளாசில் பாஸ்.. குவியும் வாழ்த்துக்கள்

313

கார்த்திகை தீபம் சீரியல் மூலம் பிரபலமான ஹர்திகா, தன்னுடைய நீண்ட நாள் காதலரை இந்த ஆண்டு நவம்பர் மாதம், பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்தார். கேரளாவில் நடந்த இவர்களின் திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஹர்திகா 'கார்த்திகை தீபம்' சீரியலில் நடித்து... ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

413

பாவங்களில் சீரியலில் நடித்த, ஷிமோனா இந்த ஆண்டு தன்னுடைய காதலர் கிரண் நேந்தல் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் பேங்கில் பணியாற்றி வருவதால், இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்தார்.

513

'அபியும் நானும்' சீரியலில் வாத்தியாக நடித்து பிரபலமான ரம்யா கௌடா, இந்த ஆண்டு தன்னுடைய காதலரும் நடிகருமான பார்கவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தான் நடித்து வந்த சீரியல்களில் இருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

புடிச்சாலும் புளியங்கொம்பு.. ராதா மகள் கார்த்திகாவின் கணவர் ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

613
Nanjil Vijayan marriage

Nanjil Vijayan marriage

கே பி ஒய் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன், இந்த ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது ஒரு காதல் திருமணமாக இருந்தாலும், பின்னர் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்திய திருமணமாக மாறியது. இவர்களது திருமணத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த ஜோடியை வாழ்த்தினர்.
 

713
janani Pradeep

janani Pradeep

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான ஜனனி பிரதீப்,  யூட்யூபில் பிரபலமான இனியன் என்பவரை இந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 

தீப்பிடித்து எறிந்த கார்! பக்கத்துக்கு வீட்டு காரருக்காக வரிந்து கட்டிய கீர்த்தி பாண்டியன்! ஷாக்கிங் ட்வீட்!

813

'தவமாய் தவமிருந்து' சீரியலில் ஒன்று சேர்ந்த நடித்த சந்தியா மற்றும் பிரிட்டோ இருவரும் ரீல் ஜோடியாக நடித்த நிலையில், பின்னர் நிஜமாகவே காதலித்து ரியல் ஜோடியாகவும் இந்த ஆண்டு மாறினர்.
 

913

'கனா காணும்' சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த, ராஜா வெற்றி பிரபுவும் தீபிகாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அழகில் ஆலியா பட்டை உரித்து வைத்திருக்கும் ராஹா! முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய ரன்பீர்!

1013

'ரோஜா' சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.  தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார். இவர் இந்த ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.
 

1113
Redin Kinsley Marriage

Redin Kinsley Marriage

பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை, தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் ரெடின் கிங்சிலி, சமீபத்தில் மைசூரில் உள்ள கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த ஜோடி தற்போது ஹனி மூன் கொண்டாட்டத்தில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

1213

பசங்க திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர்... ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் கிஷோர். இவர் வானத்தைப்போல தொடரில் நடித்த ப்ரீத்தி குமார் என்பவரை இந்தாண்டு கரம் பிடித்தார்.
 

1313

அதே போல் 'வானத்தைப்போல' சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அஸ்வின் கார்த்திக், தன்னுடைய நீண்ட நாள் காதலியான காயத்ரி என்பவரை இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடந்த நிலையில், பல சின்னத்திரை பிரபலங்கள் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Salaar Day 3 Box Office: திரையரங்கில் வசூல் மழை..! மூன்றே நாளில் 400 கோடியை நெருங்கும் பிரபாஸின் 'சலார்'!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved