Malavika Mohanan Photos: மாப்பிள்ளை தான் மிஸ்ஸிங்.! மணமகளாக மாறி.. மனதை வருடும் மாயக்காரி மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன்... மணமகள் கெட்டப்பில் வளைத்து வளைத்து, எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு, நச் கேப்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
அடிக்கடி விதவிதமான கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டு, சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் மாளவிகா மோகனன் மணமகள் கெட்டப்புக்கு மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சல்லடை போன்ற வெள்ளை நிற லெஹன்கா... அணிந்து, அதற்கேற்றாப்போல் நகைகளையும் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை மாளவிகா மோகனன் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்கள், தாறுமாறாக லைக் போட்டு குவித்து வருகிறார்கள்.
இயக்குனர் லிங்குசாமியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்!
மேலும் எடக்கு முடக்கான கேள்விகளுக்கும்... வதந்திகளுக்கும் வழிவிடாத வண்ணம், 'இது என் திருமணம்' இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார் மாளவிகா.
குடும்ப உறவினர் அல்லது நண்பர்களின் தெரியுமான கொண்டாட்டத்தில், மாளவிகா மோகனன் கலந்து கொண்டபோது, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இந்த திருமணத்தில் பக்கா ட்ரேடிஷ்னல் உடையில்... மிதமிஞ்சிய அழகில் தேவதை போல் மாளவிகா மோஹனன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, யாரும் எதிர்பார்த்திராத வண்ணம்... அதிரடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவான 'மாஸ்டர்' படத்தில் ஹீரோயினாக மாறினார்.
தன்னுடைய கதை தேர்விலும், கதாபாத்திரத்திலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்தடுத்து சில பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.