Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு மரண பயம் காட்டிய விபத்து...காருடன் நேருக்கு நேர் மோதிய பகீர் வீடியோ காட்சி

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் போது நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

First Published May 7, 2024, 8:42 AM IST | Last Updated May 7, 2024, 8:41 AM IST

சவுக்கு சங்கர் கைது

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் அரசியல் தொடர்பான கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருபவர், இவர் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை கூறி வந்தார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட தலைவர்களையும் விமர்சித்து கருத்து தெரிவித்தார். இவரது பேச்சு சமூகவலைதளங்களில் அதிகளவில் பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உண்மைக்கு மாறான தகவல்களையும், அரசியல் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் விமர்சிக்க தொடங்கினார். இதன் காரணமாக சவுக்கு சங்கரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தான் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தவர் பெண் காவலர்கள் தொடர்பாக தவறாக பேசினார். 

விபத்தில் சிக்கிய வாகனத்தில் வீடியோ

இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்ந்த கோவை போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதிகாலை நேரத்தில் கைது செய்து சவுக்கு சங்கரை போலீஸ் வேனில் அழைத்து வந்தனர். அப்போது போலீஸ் வேன் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கருக்கும் சிறிது காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வேன் நடு ரோட்டில் கார் மீது மோதும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories