மகாராஷ்டிராவில் பரபரப்பு.. வாக்குச்சாவடிக்குள் புகுந்து EVM எந்திரத்தை கொளுத்திய வாலிபர் - வைரல் வீடியோ!

Loksabaha Election : நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பகல்வாடி என்கின்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் EVM இயந்திரத்திற்கு நெருப்பு வைத்தது கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published May 7, 2024, 5:08 PM IST | Last Updated May 7, 2024, 5:08 PM IST

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்கிய இந்த வாக்குப்பதிவு, ஏழு கட்டமாக நடக்க உள்ள நிலையில், இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

குஜராத் மாவட்டத்தில் 25 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளிலும், உத்திரபிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகளிலும் என்று மொத்தம் 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. 

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கிலி என்ற நகரத்தில் உள்ள பகல்வாடி என்கின்ற கிராமத்தில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த EVM எந்திரத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனால் பதறிய மக்கள் அலறியடித்து வெளியேறியுள்ளனர். 

பிறகு வாக்கு சாவடியில் இருந்த அதிகாரிகள் தண்ணீரை ஊற்றி அந்த தீயை அணைத்துள்ளனர். தற்பொழுது அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. பரபரப்பு மிகுந்த அந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.