Poonam Pandey : என் புருஷன் நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் - கதறிய கவர்ச்சி நடிகை... கண்கலங்கிய ரசிகர்கள்
Poonam Pandey : கோவாவுக்கு ஹனிமூன் சென்றபோது, தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி போலீஸில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் பூனம் பாண்டே.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா. இவர் தற்போது தொகுப்பாளராகவும் களமிறங்கி உள்ளார். அந்த வகையில் இந்தியில் ஓடிடிக்காக தயாராகும் லாக் அப் என்கிற ரியாலிட்டி ஷோவை கங்கனா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பாலிவுட் பரபரப்பாக பேசப்பட்ட பிரபலங்கள் சிலர் கலந்துகொண்டு தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பேசுகின்றனர்.
அதன்படி இதில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, தன் கணவரால் தான் எதிர்கொண்ட சித்திரவதைகள் குறித்து கண்ணீர்மல்க பேசி உள்ளார். நடிகை பூனம் பாண்டே கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கோவவுக்கு ஹனிமூன் சென்றது இந்த ஜோடி.
அங்கு தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி போலீஸில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் பூனம் பாண்டே. பின்னர் சில தினங்களிலேயே தாங்கள் இருவரும் மீண்டும் இணைந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் பூனம் பாண்டே. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் விளம்பரத்துக்காக இவ்வாறு செய்வதாக கடுமையாக சாடினர்.
இந்நிலையில், லாக் அப் நிகழ்ச்சியில், இதுகுறித்து பேசிய பூனம் பாண்டே, 4 வருடங்களாக நான் சாம் பாம்பே உடன் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடமும் நான் சரியாக தூங்கியதில்லை, சாப்பிட்டதில்லை. அடிவாங்கினேன். ஒரே ரூமில் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறேன். நான் யாருக்கும் கால் செய்யக்கூடாது என்பதற்காக என் போனை உடைத்து விட்டான். நாயை அடிப்பது போல் என்னை அடித்தான். நிறைய முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்” என கூறி உள்ளார். இதைப்பார்த்த கண்கலங்கிய நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Maaran movie : மாறன் படத்தை கண்டுகொள்ளாத தனுஷ்... புறக்கணிப்பின் பின்னணி என்ன?